‘3-ஆம் உலகப்போரின் வாய்ப்பு இது’- எச்சரிக்கை விடுக்கும் ட்ரம்ப் !

Donald Trump

அமெரிக்கா : ஜோ பைடன் தூங்கிக் கொண்டு இருப்பதால் மூன்றாம் உலகப்போர் நடைபெற வாய்ப்பு உள்ளது என அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார்.

அமெரிக்காவில் நாளுக்குநாள் நடைபெறப் போகும் அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் என்பது தீவிரமடைந்து வருகிறது. அதில் மாநாட்டில் மூலமாக ஜனநாயக கட்சியும் தங்களது பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தி வருகின்றனர். இதனால், ஆரம்பத்தில் முன்னாள் அதிபரும் தற்போதைய அதிபர் வேட்பாளருமான டொனால்டு ட்ரம்ப்புக்கு ஆதரவு எப்படி இருக்கிறதோ, அதற்கு இணையாகவே ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளரும் தற்போதைய துணை வேட்பாளருமான கமலா ஹாரிஸுக்கும் இருந்து வந்தது எனக் கூறப்பட்டது.

ஆனால், தற்போதைய கருத்துக்கணிப்பில் கமலா ஹாரிஸ் சற்று முன்னிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், ‘மூன்றாம் உலகப்போரை நோக்கி உலகம் சென்று கொண்டிருக்கிறது’ என ட்ரம்ப் அவரது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை நேற்று பதிவிட்டிருந்தார். அது உலகநாடுகளைச் சற்று கூர்ந்து கவனிக்கும் வகையில் அமைந்துள்ளது.

இது குறித்து அந்த பதிவில் அவர் கூறியதாவது, “அமெரிக்காவுக்காக மத்திய கிழக்கு நாடுகளில் பேச்சுவார்த்தை நடத்துவது யார்? எல்லா இடங்களிலும் குண்டுகள் வீசப்படுகின்றன. உலகம் மூன்றாம் உலகப்போரை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. ஆனால், ஜோ பைடன் கலிபோர்னியா பீச்சில் தூங்கிக் கொண்டு இருக்கிறார். அவரது கட்சியினரால் ஏற்கனவே ஜோ பைடன் புறக்கணிக்கப்பட்டுவிட்டார்.

கமலா ஹாரிஸ் தேர்தல் பிரசாரம் என்ற பெயரில் கட்சி தோழர்களுடன் டூர் சென்று கொண்டிருக்கிறார். இது 3-ஆம் உலகப்போருக்கு வழி வகுக்கும். நமக்கு 3-ஆம் உலகப்போர் வேண்டாம்”, என ட்ரம்ப் பதிவில் பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவு மற்ற உலகநாடுகளை டிரம்ப்பை திரும்பிப் பார்க்கச் செய்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்