கோகுலாஷ்டமி 2024 ..! விரைவில் கர்ப்பம் தரிக்க கிருஷ்ணரை வழிபடும் முறை..!

Gokulastami (1)

சென்னை – குழந்தை பேறு  கிடைக்க சஷ்டி விரதம் எந்த அளவிற்கு பலன் கொடுக்குமோ அதே அளவிற்கு கிருஷ்ண ஜெயந்தி வழிபாடும் பலனை கொடுக்கும் என ஆன்மீக ரீதியாக கூறப்படுகிறது. கிருஷ்ணர் பிறந்த நாளான இன்று குழந்தை பேரு கிடைக்க விரதம் இருக்க முடியாதவர்கள் எவ்வாறு வழிபட வேண்டும் என்பதை இந்த குறிப்பில் அறியலாம்.

ஸ்ரீ மகா விஷ்ணு கிருஷ்ணராக அவதரித்த தினமே கோகுலாஷ்டமி ஆகும் . ஆவணி மாதம் வரும் முதல் திருவிழாவே  கோகுலாஷ்டமி என்று சொல்லக்கூடிய கிருஷ்ண ஜெயந்தி தான். இந்த ஆவணி மாதம் வரக்கூடிய முதல் அஷ்டமி நாளில் நள்ளிரவில் சிறைச்சாலையில் கிருஷ்ணர் அவதரித்ததாக புராணங்கள் கூறுகிறது.

அதுமட்டுமல்லாமல்  அஷ்டமி திதியையும்  ரோகினி நட்சத்திரத்தையும் கிருஷ்ண ஜெயந்தியாக வழிபாடு செய்யப்படுகிறது. அதன்படி 26 ஆம் தேதி காலை  அஷ்டமி திதி துவங்குகிறது , ஆகஸ்ட் மாதம் 27 ஆம் தேதியில்   ரோகினி நட்சத்திரமும்  இருப்பதால் இந்த இரண்டு தினங்களுமே கிருஷ்ணரை வழிபட சிறந்த நாளாக கூறப்படுகிறது. இதில் குறிப்பாக ஆகஸ்ட் 26 ஆம் தேதி கோகுலாஷ்டமியாக  கொண்டாடப்படுகிறது.

விரதம் இல்லாமல் வழிபடும் முறை;

கிருஷ்ணரின் திரு உருவ  படத்தை மனப்பலகையில் வைத்து கொள்ள வேண்டும் .கிருஷ்ணர் படம் இல்லையெனில் பெருமாள் படம் இருந்தாலும் போதுமானது. குறிப்பாக குழந்தை  வரம் வேண்டும் என நினைப்பவர்கள் ஸ்ரீ கிருஷ்ணர் குழந்தை உருவில் இருக்க கூடிய  அதாவது தவிழ்ந்து வெண்ணை கையில் இருக்கும் அந்த கிருஷ்ணர் உருவ படத்தை வைத்து பூஜை செய்வது மிகச் சிறப்பாக கூறப்படுகிறது.

பிறகு கிருஷ்ணரின் படத்திற்கு பூக்களால் அலங்காரம் செய்து நெய்வேத்தியமாக பால், வெண்ணை, தயிர் போன்றவற்றையும் கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த இனிப்பு பதார்த்தமான லட்டு, அவல் , சீடை போன்றவற்றை வைக்க வேண்டும் .

பிறகு வீட்டின் வாசல் படியில் இருந்து நீங்கள் பூஜை செய்யும் இடம் வரையில் குழந்தையின் பாதம் உள்நோக்கி வருவது போல் அரிசி மாவால் வரைந்து  கொள்ள வேண்டும் .பிறகு தீப தூப ஆராதனை செய்து கிருஷ்ணருக்கு உரிய மந்திரங்களை கூறி மனம் உருகி வேண்டிக் கொள்ள வேண்டும். பிறகு அந்தப் பதார்த்தங்களை குழந்தைகளுக்கும்  மற்றவர்களுக்கும் கொடுக்க வேண்டும்.

விரதம் இருந்து வழிபடும் முறை;

26 ஆம் தேதி காலை முதல் இரவு சந்திர தரிசனம் வரையிலும் விரதம் மேற்கொள்ள வேண்டும். விரத நேரங்களில் பால் ,பழம் மட்டும்  சாப்பிட்டுக் கொள்ளலாம். பிறகு மாலை 5 மணிக்கு மேல் உங்கள் வழிபாட்டுகளை வைத்துக் கொள்ளலாம். மாலை 6.30-7.30 வரை  வழிபட சிறந்த நேரமாக கூறப்படுகிறது. இந்த நேரத்தில் உங்கள் வழிபாடுகளை செய்து சந்திர தரிசனத்தை பார்த்துவிட்டு நீங்கள் விரதத்தை முடித்துக் கொள்ளலாம்.

ஆனால் குழந்தை வரம் வேண்டும்  என இருப்பவர்கள் ஆகஸ்ட் 26 மற்றும் ஆகஸ்ட் 27ஆம் தேதி வரை வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக அஷ்டமி திதியும் ரோகினி நட்சத்திரமும் இணையும் நேரமான ஆகஸ்ட் 27ஆம் தேதி காலை 6 -7;20 வரை வழிபடுவது மிகவும் சிறப்பாகவும் சக்தி வாய்ந்த நேரமாகவும் சொல்லப்படுகிறது.

நீங்கள் விரதம் மேற்கொண்டாலும் மேற்கொள்ளவில்லை என்றாலும் இந்த நேரத்தில்  பூஜையை செய்து மனம் உருகி வேண்டிக் கொண்டாலே அடுத்த கோகுலாஷ்டமிக்குள் குட்டி கிருஷ்ணன் உங்கள் வீட்டிலும் தவிலுவார் என்ற நம்பிக்கையும் உள்ளது. அதனால் கிருஷ்ணரின் பரிபூரண அருளைப் பெற கோகுலாஷ்டமி அன்று கிருஷ்ணரை சிறப்பாக வரவேற்போம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

today live news
Puththozhil kalam - DMK MP Kanimozhi
Sellur raju - Sengottaiyan
MS Dhoni
Power Star Srinivasan - TVK leader Vijay
CSK vs RCB RCB
bumrah MI