“விஜய் எங்கள் சமூகத்தை சார்ந்தவர்.?” ஆதரவளித்த வெ.மு.க.! நீளும் த.வெ.க கொடி சர்ச்சை.! 

VMK Flag - Vijay introduce TVK Flag

திருச்சி : வெள்ளாளர் சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் விஜய் குடும்பத்தில் இருக்கிறார்கள். எங்கள் சமுதாயத்தைச் சார்ந்த ஒருவர் கட்சி ஆரம்பித்து இருப்பது எங்களுக்குப் பெருமை என வெ.மு.க அமைப்பினர் செய்தியாளர் சந்திப்பில் கூறினர்.

தமிழக வெற்றிக் கழக கட்சித் தலைவர் விஜய் நேற்று முன்தினம் தனது கட்சிக்கொடி, கட்சிப் பாட்டு ஆகிவற்றை அறிமுகம் செய்தார். அந்த கொடியின் நிறம் ஸ்பெயின் நாட்டுக் கொடி போல உள்ளது. யானைகள் – சமாஜ்வாடி கட்சி சின்னம், நடுவில் உள்ளது வாகை மலர் அல்ல தூங்குமூஞ்சி மலர் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.

மேலும் த.வெ.க கட்சிக் கொடியானது வெள்ளாளர் முன்னேற்றக் கழக சமுதாயக் கொடி நிறத்தை ஒத்துபோய்யுள்ளது என்ற பேச்சுகளும் எழுந்தது. அந்த கொடியில் இருக்கும் அதே போல சிகப்பு, மஞ்சள், சிகப்பு என இருந்தது. அதில் புலிப் படம் கொடியில் இடம்பெற்று இருக்கும், த.வெ.க கட்சிக்கொடியில் யானை வாகை மலர் படம் இடம்பெற்று இருக்கும்.

வெள்ளார் முன்னேற்றக் கழக கொடி, தமிழக வெற்றிக் கழக கொடி விவகாரம் குறித்து, இன்று திருச்சியில் வெள்ளாளர் முன்னேற்ற கழகத்தினர் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தனர். அவர்கள் கூறுகையில், ” வெள்ளாளர் முன்னேறக் கழகக் கொடி சர்ச்சை சமூக வலைதளத்தில், செய்தித்தாள்களில் சென்றுகொண்டே இருக்கிறது.

மேலே சிகப்பு – மஞ்சள் – சிகப்பு என எங்கள் கொடி உள்ளது. எங்கள் கொடி , கட்சி பதிவு செய்யப்பட்டது. இதில், வெள்ளாளர் அமைப்பில் உள்ள அனைத்து உட்பிரிவுகளையும் உள்ளடக்கி வெள்ளாளர் அமைப்பை கட்டமைத்துள்ளோம். வெள்ளாளர் சமுதாய அமைப்பிற்கும் விஜய்க்கும், அவரது கட்சிக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.

வெள்ளாளர் சமுதாயத்தை சார்ந்தவர்கள் விஜய் குடும்பத்தில் இருக்கிறார்கள். அதனால் நாங்கள் பெருமைப்படுகிறோம். அவர் மிகப்பெரிய உச்ச நடிகர், அவர் சாதி, மதங்கள் கடந்து அனைத்திற்கும் பொதுவானவர் ,  தற்போது அவர் கட்சி ஆரம்பித்துள்ளார்.

எங்கள் சமுதாயத்தை சார்ந்த ஒருவர் உச்சநட்சத்திரமாக இருக்கிறார். விஜய் கட்சி ஆரம்பித்து இருப்பது எங்களுக்கு பெருமை. அவரை வரவேற்கிறோம். பொது வெளியில் எங்களுக்கும் அவங்களுக்கும் எந்தவித பிரச்னையும் கிடையாது. எங்களுக்குள் மோதல்கள் கிடையாது. எங்கள் கொடியில் புலி இருக்கிறது. அதில் யானை வாகைப்பூ எல்லாம் எல்லாம் இருக்கிறது. ஒரே மாதிரியான கலர் அவ்ளோதான். எல்லா நிறத்தலையம் கொடி வச்சிட்டாங்க. இதுக்குமேல நிறம் இல்ல. விஜய் கட்சி ஆரம்பித்த நோக்கம்  நிறைவேற வாழ்த்துக்கள்.

நங்கள் 20 வருடமாக இந்த அமைப்பை நடத்தி வருகிறோம். சமூக வலைத்தளத்தில், செய்தித் தாள்களில் சில குழப்பங்கள் நிலவியது. அதனைத் தெளிவுபடுத்த தான் நாங்கள் இன்று செய்தியாளர் சந்திப்பு நிகழ்த்தினோம். நாங்க சாதிய அமைப்பு அவங்க அரசியல் அமைப்பு.” என வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தினர் செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் அளித்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்