20 ரூபாய் சிஸ்டம் …!ஆர்.கே.நகரில் அதிமுக தோல்வி …!அதிமுகவினர் அவதூறு …!டி.டி.வி.தினகரன் அதிரடி
அதிமுக தோல்வியடைந்ததால் 20 ரூபாய் சிஸ்டம் குறித்து ஆளும் கட்சியினர் அவதூறு பரப்பி வருகின்றனர் என்று அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் டி.டி.வி.தினகரன் குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கருத்து தெரிவித்தார் .அவர் கூறுகையில், திருப்பரங்குன்றம் தேர்தலில் தினகரனின் ரூ. 20 சிஸ்டம் செல்லுபடியாகாது. எதிரிகள் என்று வந்துவிட்டால் அவர்களை எதிர்க்க அதிமுக வியூகம் வைக்கும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
இந்நிலையில் அவரது கருத்துக்கு அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மதுரையில் பதில் தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,ஆர்.கே நகரில் அதிமுக தோல்வியடைந்ததால் 20 ரூபாய் சிஸ்டம் குறித்து ஆளும் கட்சியினர் அவதூறு பரப்பி வருகின்றனர்.விரைவில் முறைகேடான அதிமுக ஆட்சி முடிவுக்கு வரும்.ஆட்சி முடிவுக்கு வரும் அறிகுறிதான் மின்வெட்டு .மேலும் தமிழகத்தில் தொடர்ந்து மின்வெட்டு நிலவி வருகிறது, மின்சாரத்துறை அமைச்சர் மின்வெட்டு அமைச்சராக உள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.