வரலாறு காணாத வீழ்ச்சியை நோக்கி செல்லும் இந்திய ரூபாயின் மதிப்பு …!கீழ் நோக்கி செல்லும் இந்திய பொருளாதாரம் …!
அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் மதிப்பு மேலும் சரிந்தது. இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு டாலர் ரூ.72.88 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது.
இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இந்திய பொருளாதாரத்தை இது பெரிய அளவில் பாதிக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவடைந்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் மதிப்பு 70.080 ரூபாயை தொட்டது. ஏழையான நாடுகளுக்கு நிகராக இந்தியாவிலும் டாலருக்கு நிகரான பணத்தின் மதிப்பு மிக மோசமான சரிவை சந்தித்துள்ளது.தற்போது மேலும் இதில் வீழ்ச்சி அடைந்துள்ளது. தற்போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 72.88 ரூபாயை தொட்டுள்ளது.இப்படியான வீழ்ச்சி இந்திய பொருளாதாரத்தை முழுவதும் சீரழிக்கும் என பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்ற்றனர்.
இந்திய பொருளாதார வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் சொல்கின்றனர்..