உக்ரைன் பயணம் : ஒப்பந்தங்கள் முதல் பிரதமர் மோடி-அதிபர் ஜெலன்ஸ்கி கருத்துக்கள் வரை!

Modi-Zelensky

உக்ரைன் : பிரதமர் மோடி உக்ரைனுக்குப் பயணம் மேற்கொண்ட நிலையில், இந்தியாவுக்கும்- உக்ரைனுக்கும் இடையே 4 ஒப்பந்தங்கள் கையொப்பமாகி இருக்கின்றன.

போலந்தில் 2 நாள் பயணத்தை முடித்து விட்டு பிரதமர் மோடி, ‘ரெயில் ஃபோர்ஸ் ஒன்’ மூலம் உக்ரைன் தலைநகர் கீவ்வை நேற்று அடைந்தார். உக்ரைன் தனி நாடாக மாறிய பின்னர் அங்குச் செல்லும் முதல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தான் என்று பெருமையையும் இதன் மூலம் படைத்தார். அங்குப் பிரதமர் மோடி சென்ற போது உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி அவரை வரவேற்றார்.

மேலும், அந்நாட்டின் தலைநகரான கீவில் உள்ள மரின்ஸ்கி அரண்மனையில் அதிபர் ஜெலென்ஸ்கியிடம் பேச்சு வார்த்தையும் நடத்தினார்.  அந்த சந்திப்பில், இந்தியா – உக்ரைன் நாடுகளுக்கு இடையே உறவி மேலும் மேம்படுத்த 4 ஒப்பந்தங்கள் கையொப்பமாகி இருக்கிறது. மேலும், உக்ரைன் – ரஷ்யா போரை நிறுத்துவது குறித்தும் இருவரும் ஆலோசனை நடத்தினார்கள்.

4 ஒப்பந்தமும்..பிரதமர் மோடியின் கருத்தும்..!

இரு நாடுகளுக்கும் இடையே விவசாயம், உணவு, மருத்துவம், கலாச்சாரம் மற்றும் மனிதாபிமான உதவி ஆகியவற்றில் ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் வகையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருக்கிறது.  மேலும், அங்குப் பேசிய பிரதமர் மோடி இந்த போரை நிறுத்துவதற்கு ரஷ்யாவும் பேச்சு வார்த்தையில் ஈடுபட வேண்டும் எனக் கூறி இருந்தார்.

இது குறித்துப் பேசிய பிரதமர் மோடி, “உக்ரைன்-ரஷ்யா போருக்குப் பேச்சுவார்த்தை மற்றும் தூதரக நடவடிக்கைகள் மூலம் மட்டுமே நடைபெற்று வரும் இந்த போரை முடிவுக்குக் கொண்டு வர முடியும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடு ஆகும். அதை விட முக்கியமாக உக்ரைனும் ரஷ்யாவும் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்.

அதைத் தொடர்ந்து அமைதிக்கான முயற்சிகளில் முன்னோக்கிச் செல்வதற்கான பங்களிப்புகளைச் செய்ய இந்தியா எப்போதும் தயாராக உள்ளது. இந்த போரில் இந்தியா நடுநிலை வகிக்கவில்லை. இந்தியா அமைதியின் பக்கமே இருக்கிறது. மேலும், இந்த மோதலில் முதல் உயிரிழப்பு ஒரு குழந்தை என்பது மனதை வேதனைப்படுத்துகிறது”, எனப் பிரதமர் மோடி கூறி இருந்தார்.

அதிபர் ஜெலன்ஸ்கி கருத்து ..!

அதைத் தொடர்ந்து பிரதமர் மோடி சந்திப்புக்குப் பிறகு அதிபர் ஜெலன்ஸ்கி செய்தியாளர்களைச் சந்தித்து மோடியுடனான சந்திப்பு குறித்துப் பேசி இருந்தார். அவர் பேசும் பொழுது, “இந்தியப் பிரதமர் மோடியுடனான சந்திப்பு வரலாற்றுச் சிறப்புமிக்க ஒன்றாகும். பல உலக நாடுகள் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதியை நிறுத்திவிட்டன. ஆனால், இந்தியா தொடர்ந்து ரஷ்யாவுடன் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது.

இதைக் கருத்துக்களை மோடியிடம் முன்வைத்தேன். மேலும், ரஷியா அதிபர் புதினுடைய பொருளாதாரம் ஆயுதம் சார்ந்ததாகும். மேலும், ரஷியா நாட்டை இந்தியா, சீனா எண்ணெய் இறக்குமதி வலு வாக்குகின்றன. அந்த வகையில் ரஷ்ய ஆயுதப்படையை இது போலப் பலப்படுத்துவதை இந்தியா நிறுத்த வேண்டும்.இந்தியா நினைப்பது போல அதிபர் புதின் இந்தியாவை மதிக்கவில்லை. அவ்வாறு மரியாதை கொண்டிருந்தால் ரஷ்யாவுக்கு மோடி வந்துள்ள நிலையில் உக்ரைன் மருத்துவமனையை ரஷ்யப் படைகள் தாக்கி இருக்க மாட்டார்கள்.

இந்தியா எங்களின் பக்கமே நிற்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இது போல நடுநிலை காப்பதை நாங்கள் விரும்பவில்லை. இந்தியாவில், இந்தியர்களின் அணுகுமுறையை மாற்றினால் ரஷ்யப் போர் நிச்சயம் முடிவுக்கு வரும். இந்தியா நினைத்தால் இந்த போர் முடிவுக்கு வரும்”, என அதிபர் ஜெலன்ஸ்கி கூறி இருந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்