“கொட்டுக்காளி” படம் என்னதான் சொல்கிறது! டிவிட்டர் விமர்சனம் இதோ!!

Kottukaali Twitter Review

சென்னை : ‘கொட்டுக்காளி’ படத்தை பார்த்த திரையுலக ஆர்வலர்கள் தங்களது எக்ஸ் தளத்தில் தங்களது விமர்சனத்தை பகிர்ந்து கொண்டனர்.

74வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் ‘The Adamant Girl’ ஆக காட்சிப்படுத்தப்பட்ட ‘கொட்டுக்காளி’ திரைப்படம் இன்று (ஆகஸ்ட் 23) வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் எழுதி இயக்கியுள்ள இப்படம் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் மற்றும் தி லிட்டில் வேவ் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது.

இன்று ஒரே நாளில் மாரி செல்வராஜ் இயக்கிய “வாழை”, சூரி நடிப்பில் “கொட்டுக்காளி” ஆகிய 2 திரைப்படமும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் கண்ணில் இருந்து கண்ணீரை வர வைத்துள்ளது என்றே சொல்லலாம்.

சர்வதேச பட விழாக்களில் திரையிடப்பட்ட கொட்டுக்காளி படம், கிராமத்தில் வசிக்கும் சூரிக்கு முறைப்பெண் அன்னா பென்னுடன் திருமணம் முடிவாகிறது. ஆனால் கல்லூரியில் படிக்கும்போது வேறொருவருடன் அன்னா பென் காதல் வயப்பட்டு சூரியை மணக்க மறுக்கிறார், பித்து பிடித்தவர் போலவும் இருக்கிறார்.

அன்னா பென்னுக்கு பேய் பிடித்துள்ளது என்று குடும்பத்தினர் பூசாரியிடம் அழைத்து செல்கிறார்கள். அந்தப் பயணத்தில் சந்திக்கும் சிக்கல்கள் என்ன? அன்னா பென் இயல்புநிலைக்கு திரும்பி சூரியை மணந்தாரா? என்பதற்கு விடை சொல்கிறது மீதி கதை. இதில் ஆச்சரியம் என்னவென்றால் இப்படிப்பட்ட ஒரு கதைக்களத்தில் படத்தில் பின்னணி இசையே இல்லை  என்பது தான். இதனாலேயே கொட்டுக்காளி’ படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

கொட்டுக்காளி டிவிட்டர் விமர்சனம்

இன்று திரைக்கு வந்த ‘கொட்டுக்காளி’ படத்தை பார்த்த திரையுலக ஆர்வலர்கள் தங்களது சமூக வலைதளங்களில் (எக்ஸ்) தங்களது விமர்சனத்தை பகிர்ந்து கொண்டனர். திரைப்படத்தைப் பற்றிய சில சுவாரஸ்யமான ட்வீட்கள் கீழே உள்ளன.

ச்சும்மா உருட்டல, என் கண் எதிரே நடந்த ஓர் நெருக்கமான சம்பவத்த, நான் எதிரே நின்று பேச முடியாமல் திணறிய தருணம் அது. நான் அப்போ யோசித்ததை 100℅ உண்மை தான்னு சொல்லிருக்க இந்த திரைப்படம்.

கொட்டுக்காளி Review: வினோத்ராஜின் மற்றொரு சமரசமற்ற கலைப் படைப்பு.

 

போரிங் ஒன்று! மிக மெதுவான திரைப்படம் & க்ளைமாக்ஸ் முழுமையடையாது. நேர்மறையான விஷயம் மட்டுமே கொட்டுக்காளி உள்ளது.

 

சினிமாடோகிராபி, ஒலி வடிவமைப்பு & செயல்திறன் மூன்று தான் இருக்கு. மூன்றும் சூப்பர். திரைக்கதை ரொம்ப வித்தியாசமா இருக்க. அது பலருக்கு செட் ஆகாது. நான் பார்த்த தியேட்டர்லயே “யோவ் என்னயா படம் இதுனு” சவுண்ட் நிறை வந்துது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்