‘எதிரிகளை குறைத்து மதிப்பிட வேண்டாம்’ ! கமலா ஹாரிஸை எச்சரித்த பில் கிளிண்டன்!
அமெரிக்கா : நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பாகப் போட்டியிடும் கமலா ஹாரிஸ்க்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளார் பில் கிளிண்டன்.
இந்த ஆண்டின் இறுதியில் நவம்பர்-5ம் தேதி அமெரிக்கா அதிபர் தேர்தலானது நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான பிரச்சாரத்தை இரு கட்சியினரும் தீவிரமாக செய்து வருகின்றனர். ஜனநாயக கட்சியின் சார்பாகப் போட்டியிடவுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸுக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகிக் கொண்டிருக்கிறது. இந்த பிரச்சாரத்தில் ஒரு பகுதியான ஜனநாயக கட்சி தங்களது மாநாட்டை நடத்தி வருகிறது.
கடந்த ஆகஸ்ட்-19 ம் தேதி தொடங்கிய 4-நாள் மாநாட்டின் முதல் நாளில் மிகத் தீவிரமாக அதிபர் வேட்பாளரான கமலா ஹாரிஸ் தனது உரையை ஆற்றினார். இதுவே அந்த கட்சியின் மீதுள்ள ஒரு எதிர்பார்ப்பைக் கூடியது, அமெரிக்காவில் நடைபெறும் இது போல மாநாட்டில் கடைசி நாளில் தான் அதிபர் வேட்பாளர்கள் பேசுவது வழக்கமாகக் கொண்டிருப்பார்கள். ஆனால், முதல் நாளில் கமலா ஹாரிஸ் பேசியது ஒட்டுமொத்த அமெரிக்காவையும் திரும்பிப் பார்க்க வைத்தது.
அதன் தொடர்ச்சியாக அடுத்த நாள் மாநாட்டில் அமெரிக்கா அதிபரான பாரக் ஒபாமா கமலா ஹாரிஸுக்கு தனது முழு ஆதரவையும் தெரிவித்து உரையாற்றினார். பின் நேற்றைய நாள் நடைபெற்ற 3-ஆம் நாள் மாநாட்டில் அமெரிக்கா அதிபரான பில் கிளிண்டன் கமலா ஹாரிஸ்க்கு ஆதரவு தெரிவித்துப் பேசியதுடன் எச்சரித்தும் பேசினார்.
இது குறித்து அவர் கூறியதாவது, “ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராகப் போட்டியிடுவதற்குக் கமலா ஹாரிசை தேர்வு செய்தது என்னைப் பொறுத்தவரைச் சரியான முடிவு தான். கடந்த 2024ம் ஆண்டில் ஒரு தெளிவான தேர்வு கிடைத்துள்ளது எனத் தோன்றுகிறது. அமெரிக்காவின் அதிபராக டொனால்டு டிரம்ப் பணியாற்றிய போது சில குழப்பத்தை ஏற்படுத்தினார். மேலும், அமெரிக்கர்களின் கனவுகளை நனவாக்கக் கமலா ஹாரிஸ் தற்போது தன்னை அர்ப்பணித்து வருகிறார்.
கமலா ஹாரிசுக்கு ஒவ்வொரு அமெரிக்க வாக்காளர்கள் வாக்களித்தால் போதும் மக்களின் கனவுகளை நிறைவேற்ற அவர் தொடர்ந்து பணியாற்றுவார். ஆனால், எதிரிகளை ஜனநாயக கட்சியினர் குறைத்து மதிப்பிடக் கூடாது. எந்த ஒரு சூழ்நிலையை வந்தாலும் அதனைக் கையாள தயாராக இருக்க வேண்டும். தற்போது நமது துணை ஜனாதிபதியாக இருக்கும் கமலா ஹாரிஸ் மிகவும் சிறப்பாகச் செயல்படுவதால் தான் நாம் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம்”, என பில் கிளிண்டன் ஆதரவு தெரிவித்துப் பேசி இருந்தார்.