“அய்யா எனக்கும் உதவி பண்ணுங்க அய்யா” யூடியூபரிடம் உதவி கேட்ட துரைமுருகன்!

harsha sai and durai murugan

சென்னை : அமைச்சர் துரைமுருகன் பிரபல யூடியூபரான ஹர்ஷா சாயிடம் உதவி கேட்டு கமெண்ட்ஸ் செய்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நக்கல் நையாண்டி எல்லாம் நமக்கு கைவந்த கலைப்பா, என்ற கோணத்தில் பிரபல யூடியூபரின் வீடியோவிற்கு கமெண்ட் செய்துள்ளார் அமைச்சர் துரைமுருகன். அப்படி அவர் செய்துள்ள சம்பவம் தான் இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

அமைச்சர் துரைமுருகன் எப்போதுமே தன்னிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு மீடியா வெளிச்சம் பார்க்காமல் நகைச்சுவையாக பதில் கொடுப்பதில் வல்லவர். அவர் அப்படி பதில் கொடுப்பது இணையவாசிகளுக்கு மீம்ஸ்க்-ளாகவும் பரவும்.

குறிப்பாக சொல்லவேண்டும் என்றால், கடந்த 2020-ஆம் ஆண்டு கூட செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு “அடேங்கப்பா., சாமி, உங்கள பத்தி எல்லாம் எங்களுக்கு தெரியும்” என பேசி ‘தக் லைப்’ கொடுத்து இருந்தார். அவர் பேசிய அந்த வார்த்தைகள் மீம்ஸ் மூலம் இணையத்தில் மிகவும் வைரலானது.

Durai Murugan meme
Durai Murugan meme / @MT

அப்படி தான் தற்போது பேஸ் புக் பக்கத்தில் அவர் கமெண்ட்ஸ் செய்துள்ளது பலரையும் சிரிக்க வைத்துள்ளது. ஏழைகளுக்கு உதவி செய்து அதற்கான வீடியோவை யூடியூபில் பதிவு செய்து வருபவர் ஹர்ஷா சாய். இவர் சமீபத்தில் விவசாயி ஒருவருக்கு 1 ஏக்கர் நிலம் கொடுத்து உதவி செய்ததாக வீடியோ வெளியீட்டு இருந்தார்.

அந்த வீடியோ மிகவும் வைரலாகி கொண்டு இருந்த நிலையில், பலரும் எங்களுக்கும் உதவி செய்யுங்கள் என்பது போல கமெண்ட்ஸ் அடித்து வந்தனர். அப்போது யாரும் எதிர்பார்க்காத விதமாக அமைச்சர் துரைமுருகன் “அய்யா எனக்கும் உதவி பண்ணுங்க அய்யா” என நகைச்சுவையாக கமெண்ட் செய்தார்.

MP Durai Murugan
MP Durai Murugan

அவர் கமெண்ட்அடுத்த சில நிமிடங்களில் அனைவரும் அவர் கொடுத்த கமெண்ட்ஸ் பார்த்து வயிறு குலுங்க சிரிக்க ஆரம்பித்தனர். அதைபோல், அவரைப்போலவே தொடர்ச்சியாக “அய்யா எனக்கும் உதவி பண்ணுங்க அய்யா” என்பதை கமெண்ட்ஸாக போட்டு வந்தனர். வைரலாக பரவிய சில நேரத்தில் அமைச்சர் துரைமுருகன் கமெண்டை டெலிட் செய்துவிட்டார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்