தமிழ் சினிமாவை உயர்த்தும் மகாராஜா! ஓடிடியில் படைத்த பிரம்மாண்ட சாதனை!!

Maharaja OTT Records

சென்னை : இந்த ஆண்டு நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் மக்களால் அதிகம் பார்க்கப்பட்ட திரைப்படம் என்ற சாதனையை மகாராஜா படம் படைத்துள்ளது.

விஜய் சேதுபதியின் 50-வது திரைப்படமான “மகாராஜா” படம் திரையரங்குகளில் வெளியாகி 100 கோடி வசூலை செய்து ஹிட் ஆன நிலையில், படம் கடந்த ஜூலை 12 அன்று ஐந்து மொழிகளில் பிரபல ஓடிடிதளமான நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியானது. ஓடிடியில் வெளியான பிறகு படம் உலகம் எங்கிலும் ட்ரெண்ட் ஆனது என்றே சொல்லலாம்.

குறிப்பாக, முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது ஜூலை மாதம் துப்பாக்கிச் சூடு நடத்தியபோது அவருடைய காதுப்பகுதியில் காயம் ஏற்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட அந்த புகைப்படத்தையும், விஜய் சேதுபதி மகாராஜா படத்தில் காதில் பேண்டேஜ் போட்டு கொண்டு இருக்கும் புகைப்படத்தையும், சேர்த்து நெட்டிசன்கள் எடிட் செய்தும் வரைந்தும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர்.

இப்படியான எடிட் செய்ததும் வெளிமாநிலங்களில் ‘மகாராஜா’ படத்திற்கு அது  ப்ரோமோஷனாக அமைந்தது என்றே சொல்லலாம். இப்படி உலகம் முழுவதும் ட்ரெண்டான மகாராஜா படம் ஓடிடியில் வெளியாகி இந்த ஆண்டு பிரமாண்ட சாதனையை படைத்துள்ளது. அது என்ன சாதனை என்றால் இந்த ஆண்டு ஓடிடியில் வெளியான இந்திய படங்களில் மக்கள் அதிகமாக பார்த்த திரைப்படம் என்ற சாதனை தான்.

இந்திய சினிமாவில் இந்த ஆண்டு நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் அதிகம் பார்க்கப்பட்ட திரைப்படமாக மகாராஜா படம் மாறியுள்ளது. மொத்தமாக இதுவரை படம்  ஓடிடியில் 18.6 மில்லியனுக்கு மேல் பார்வையாளர்களை கடந்துள்ளது. இந்த படத்துக்கு அடுத்ததாக, இரண்டாவது இடத்தில் க்ரூ ( Crew) படம் பிடித்துள்ளது. மகாராஜா படம் பிரமாண்ட சாதனையை படைத்துள்ள நிலையில், ரசிகர்கள் பலரும், “கோலிவுட் திரைப்படம் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றுள்ளது” என பாராட்டி வருகிறார்கள்.

இந்த ஆண்டு நெட்ப்ளிக்ஸ் ஓடிடியில் அதிகம் பார்வையாளர்களை பெற்ற 3 படங்கள் 

1. மகாராஜா – 18.6 மில்லியனுக்கு மேல்

2. க்ரூ ( Crew) – 17.9 மில்லியனுக்கு மேல்

3.லாப்டா லேடீஸ் – 17.1 மில்லியனுக்கு மேல்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live today update
E-pass
sunita williams
ashwani kumar HARDIK
Commercial cylinder price
ashwani kumar
MI vs KKR - IPL 2025 (1)