விமானத்தில் தனியாக பயணிக்கும் பெண்களுக்கு இப்படி ஒரு சலுகையா.! இண்டிகோ ஏர்லைன்ஸ் புதிய அறிவிப்பு…

IndiGo introduces female seat

டெல்லி: விமானத்தில் தனியாக பயணிக்கும் பெனுக்கு மற்றொரு பெண் பயணிக்கு அடுத்த இருக்கையை தேர்வு செயயும் அம்சத்தை இண்டிகோ ஏர்லைன்ஸ் கொண்டுவந்துள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட் விமான நிறுவனமான இண்டிகோ, ஆண்களுக்கு அருகில் அமர்வதை தவிர்க்கும் வகையில், பெண் பயணிகளுக்கு மற்ற பெண்களுக்கு அடுத்த இருக்கைகளை தேர்வு செய்யும் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது பெண் பயணிகள் இணைய செக்-இன் போது, மற்ற பெண் பயணிகள் முன் பதிவு செய்த இருக்கைகளைப் பார்க்க அனுமதிக்கிறது.

கடந்த 2023 ஆம் ஆண்டு ஏர் இந்தியா விமானத்தில் நடந்த ஒரு சம்பவத்தில், போதையில் இருந்த ஆண் பயணி ஒருவர் சக பெண் பயணி மீது சிறுநீர் கழித்த சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியது. இது மட்டும் இல்லாமல், சக பெண் பயணி மீது பாலியல் சீண்டல் என பல சம்பவங்களை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அது மாதிரியான சம்பவங்களை தவிர்க்க, தனியாக பயணிக்கும் பெண் பயணிகளுடனான PNR-களுக்கு ஏற்ப இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பெண்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்தும் வகையில், இண்டிகோ ஏர்லைன்ஸ் மே மாதம் இதற்கான சோதனையை  தொடங்கியது.

பெண்களுக்கென இளஞ்சிவப்பு நிறத்தில் குறிக்கப்பட்ட இருக்கைகளைத் தேர்ந்தெடுக்க பிரேத்தேக வசதி கொடுப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்கள் மற்றொரு பெண் பயணியின் அருகில் அமர்ந்திருப்பதை உறுதி செய்யும். இருக்கை தேர்வு செயல்முறையின் போது, இந்த விருப்பம் பெண் பயணிகளுக்கு மட்டுமே தெரியும்.

இதற்கு முன்பதிவு செய்யும் போது, பயணிகள் தங்கள் பாலினத்தை அடையாளம் காண வேண்டும் என்று விமான நிறுவனத்தின் விதிமுறை. பெண்களின் பயண அனுபவத்தை மிகவும் வசதியாகவும், பாதுகாப்பாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு இண்டிகோ ஏர்லைன்ஸ் இந்த முயற்சியை எடுத்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்