நடனமாடி கலக்கிய மனு பாக்கர்! பதக்க மங்கைக்கு சென்னையில் பாராட்டு விழா!

Manu Bhaker in Chennai

சென்னை : ஒலிம்பிக் போட்டியில் 2 வெண்கலப் பதக்கம் வென்ற பதக்க மங்கை மனு பாகருக்குச் சென்னை இன்று பாராட்டு விழாவானது நடைபெற்றது.

மனு பாக்கரும் வெண்கலப் பதக்கமும் ..!

நடப்பாண்டில் பாரிசில் நடைபெற்று முடிந்துள்ள ஒலிம்பிக் தொடரில் இந்திய அணி சார்பாகக் கலந்து கொண்டவர் தான் மனு பாக்கர். அதில் 50மீ. துப்பாக்கி சுடுதல் மகளீருக்கான தனிப் பிரிவிலும், கலப்பு பிரிவிலும் 2 வெண்கலப்பதக்கம் வென்று இந்தியாவிற்குப் பெருமை சேர்த்தார். ஒரே ஒலிம்பிக் தொடரில் 2 வெண்கலப்பதக்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற பெருமையையும், சாதனையையும் படைத்தார்.

இதனால், அவர் ஒலிம்பிக் போட்டிகளை முடித்து விட்டு தாயகம் திரும்பிய போது அவருக்கு மிகுந்த வரவேற்பு என்பது டெல்லி விமான நிலையத்தில் கிடைத்தது. மேலும், அரசியல் கட்சித் தலைவர்கள், ரசிகர்கள் எனப் பலரும் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வந்தனர்.

சென்னையில் பாராட்டு விழா ..!

இந்த நிலையில், பதக்க மங்கை மனு பாகரைக் கௌரவிக்கும் விதமாகச் சென்னை முகப்பேரில் உள்ள வேலம்மாள் நெக்சஸ் பள்ளியில் அவருக்கு இன்று பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பிரம்மாண்டமான ஏற்பாடுகளுடன் அங்கு விரைந்த மனு பாக்கரை பள்ளி மாணவர்கள் வரவேற்றனர்.

அதனை தொடர்ந்து பாராட்டு விழா தொடங்கிய போது பெரிய ஒரு ஆளுயர ரோஜா மாலையையும், தலையில் கிரீடம் ஒன்றையும் அணிவித்துச் சிறப்பான ஒரு வரவேற்பு அளித்தனர்.

மாணவிகளுடன் நடனம்..!

அதன் பின் அந்த பாராட்டு விழாவில், மனு பாக்கரிடம் அங்கு இருந்த பள்ளி மாணவிகள் நடனமாட அழைத்தனர். அவர்களின் அழைப்பைச் சற்றும் மறுக்காமல் ஏற்றுக் கொண்ட மனு பாக்கரும் மாணவிகளுடன் நடனமாடி அந்த விழாவிற்கு மேலும் உற்சாகம் சேர்த்தார். அவர் மாணவிகளுடன் நடமாடிய வீடியோ இணையத்தில் வரலாகப் பரவி வருகிறது. மேலும், அங்கிருந்த பள்ளி மாணவ, மாணவிகளின் எழுப்பிய கேள்விகளுக்கும் பதிலளித்து அவர்களுடன் உரையாடி மேலும் அந்த விழாவை கலகலப்பாக வைத்திருந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்