சிறகடிக்க ஆசை சீரியல்.. மீனா மீது கோபமடைந்தார் முத்து ..முத்துக்கு என்ன ஆச்சு.?
சென்னை -சிறகடிக்கை ஆசை தொடரில் இன்றைய [ஆகஸ்ட் 20]விறுவிறுப்பான காட்சிகளை இந்த பதிவின் மூலம் அறியலாம்.
சத்யாவோட பிறந்தநாளுக்கு முத்து மீனாவை போக கூடாதுன்னு சொல்லிட்டாரு ..இதை பத்தி மீனா யோசிச்சிட்டு இருக்காங்க .அப்போ அங்க சுருதி வந்து மீனா ஏன் டல்லா இருக்கீங்க ன்னு கேக்குறாங்க.. மீனாவும் முத்து சொன்ன விஷயத்தை சொல்றாங்க. உங்க தம்பி பிறந்த நாளுக்கு அவர் ஏன் போகக்கூடாதுன்னு சொல்றாரு. அவரு சொன்னா நீங்க இதெல்லாம் கூட கேப்பீங்களா.. நீங்க போயிட்டு வாங்க மீனா அப்படின்னு சொல்றாங்க .மீனாவும் முதல்ல தயங்குறாங்க.. அப்புறம் கிளம்பி போயிடறாங்க. இதை விஜயா கேட்டுட்டே இருக்காங்க.. அப்போ இன்னைக்கு வீட்ல ஒரு பிரச்சனை இருக்கு அப்படின்னு சந்தோசப்படுறாங்க. மீனா கோயிலுக்கு போறாங்க அங்கே மீனாவோட பேமிலி எல்லாரும் இருக்காங்க. சத்யாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்றாங்க .
நீ வர மாட்டியோனு நெனச்சேன் அக்கா எனக்காக நீ வந்திருக்கிற எனக்கு ரொம்ப சந்தோசம் அப்படின்னு சத்யா சொல்றாரு. இப்ப வீட்டுக்கு முத்து வந்துடுறாரு மீனா மீனானு .. கூப்பிடுகிறார். மீனா வரவே இல்ல. விஜயா சொல்லுறாங்க நீ வாட்டர் டேங்க் மேல ஏறி நின்னு கூப்பிட்டாலும் அவ வரமாட்டா ..அவ தம்பியோட பிறந்தநாள் கொண்டாட்டத்தில இருப்பா அப்படின்னு முத்துவை ஏத்தி விடுறாங்க.ஏன் பொண்டாட்டி ந சொன்னதை மீற மாட்டான்னு விஜயா கிட்ட வாக்குவாதம் பண்ணுறாரு .விஜயா சொல்லுறாங்க நீ போயி கோவில்ல பாரு நம்பலைனா . முத்துவும் கோபத்தோட கோவிலுக்கு போறாரு. அங்க மீனா கூழ் ஊத்திட்டு இருக்காங்க.. முத்துவை பார்த்ததும் ஷாக் ஆகி நீங்களா.. அப்படின்னு கேக்குறாங்க.
உனக்கு தம்பி பாசம் தானே பெருசா இருக்கு.. அம்மா சொன்னாங்க நான்தான் நம்பல என் பொண்டாட்டி என் பேச்சை மீறி போக மாட்டேன்னு சொன்னே என்ன செருப்பால அடிச்ச மாதிரி பண்ணிட்ட இல்ல.. அப்படின்னு கிளம்பிறாரு . பின்னாடியே மீனாவும் போறாங்க.. மீனா வீட்ல அண்ணாமலைக்கு கூழ் ஊற்றி கொடுக்குறாங்க. என்னம்மா விசேஷம் அப்படின்னு அண்ணாமலை கேக்குறாங்க.. தம்பிக்கு பிறந்தநாள் மாமா அப்படின்னு சொல்றாங்க மீனா. சரிமா நான் அப்புறமா கால் பண்ணி அவனுக்கு வாழ்த்து சொல்லிக்கிறேன். இப்ப விஜயாவுக்கு கூழ் குடுக்குறாங்க அதுக்கு விஜயா சொல்றாங்க ஏன் நான் என்ன சோத்துக்கு வழி இல்லாம இருக்கேனா .. அத்தா இது சாமிக்கு பிரசாதம் பண்ணுனதுனு சொல்றாங்க. அப்பவும் விஜயா கேக்காம எனக்கு வேண்டானு சொல்லிடறாங்க.. இப்ப சுருதி வர்றாங்க மீனா போயிட்டு வந்துட்டீங்களா ஏதாச்சும் பிரச்சனையா அப்படின்னு கேக்குறாங்க.
ஆமா அங்க அவர் வந்துட்டாரு.. எப்படி அவருக்கு தெரியும் அப்படின்னு ஸ்ருதி கேக்குறாங்க.. அத்தை சொல்லிவிட்டு இருக்காங்க ..இந்த ஆன்ட்டிக்கு ஏன் இந்த வேலை.. கோவப்பட்டாரா அப்படின்னு கேக்குறாங்க ஸ்ருதி . வீட்டுக்கு வந்தா தான் தெரியும்னு மீனா சொல்லிடுறாங்க. சரி மீனா எனக்கு டயர்டா இருக்கு நான் ரூமுக்கு போறேன் அப்படின்னு சொல்லி ரூமுக்கு போயிடறாங்க ஸ்ருதி . இப்ப முத்து குடுச்சுட்டு வீட்டுக்குள்ள வராரு. ஏங்க குடிச்சிட்டு வந்திருக்கீங்க அப்படின்னு மீனா கேக்குறாங்க.. அது என் இஷ்டம்னு முத்து சொல்கிறாரு. புரியுதுங்க நீங்க சொல்லியும் நான் கேட்காம போனது தப்புதான்.. இவன் என்ன சொல்றது நம்ம என்ன கேட்கிறதுனு கிளம்பி போயிட்ட.. நான் அம்மாகிட்ட உனக்காக இந்த இடத்தில் தான் நின்னு பேசினேன்.. என் பொண்டாட்டி என் பேச்சை மீற மாட்டான்னு.. அப்படின்னு வருத்தத்தோட சொல்லிட்டு இருக்காரு.
மீனாவும் நான் பண்ணது தப்பு தான் என்னை மன்னிச்சிடுங்க அப்படின்னு சொல்றாங்க .ஆனா அவன் என்னோட தம்பிங்க ..தம்பி பிறந்த நாள்க்கு எப்படி போகாம இருக்க முடியும் அப்பா இல்லாத புள்ள வேற .இப்படியே சொல்லுங்க எத்தனையோ பேருக்கு அப்பா இல்லாம நல்லா படிச்சு நல்லா இருக்காங்க.. இவன் தறுதலைன்னு சொல்லிக்கிட்டே அப்படியே பெட்ல சாஞ்சுறாரு . இப்போ விஜயா வராங்க.. நீங்க நினைச்சது நடந்துருச்சு இல்ல அத்தை அப்படின்னு மீனா கேக்குறாங்க. இல்ல நான் நிறைய நினைச்சேன் இது கம்மிதான்னு சொல்றாங்க. இப்போவாச்சும் உன்னைய பத்தி தெரிஞ்சுகிட்டானே.. இப்ப எனக்கு எப்படி இருக்கு தெரியுமா அல்வா சாப்பிடணும் போல இருக்கு அப்படின்னு சந்தோசமா சொல்லிட்டு இருக்காங்க விஜயா .. இதோட இன்னைக்கு எபிசோட் முடிந்தது. நாளைக்காவது முத்து சமாதானம் ஆயிடுவாரா.. இல்ல மறுபடியும் சண்ட அதிகமாகுமானு பார்க்கலாம்.