மலையாள நடிகைகளுக்கு பாலியல் நெருக்கடி.. ஹேமா கமிட்டி பரபரப்பு அறிக்கை.!

HemaCommittee

கேரளா : மலையாள திரைத்துறையில் நடிகைகள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்ய 2017-ல் அமைக்கப்பட்ட நீதிபதி ஹேமா ஹேமா கமிட்டி அறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

2017ஆம் ஆண்டு மலையாள நடிகர் திலீப், பிரபல நடிகையை கடத்திய விவகாரத்தில், மலையாள சினிமா துறையில் பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலின சமத்துவமின்மை தொடர்பான பிரச்சனைகளை ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டது. இந்த குழு தனது அறிக்கையை 2019-ம் ஆண்டு அரசிடம் சமர்ப்பித்தது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டாலும், அதில் முக்கியமான தகவல்கள் இருப்பதாக நம்பப்படுவதால், அறிக்கையின் விவரங்கள் வெளியிடப்படவில்லை.

2019- ல் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடியானதால் தற்பொழுது அந்த அறிக்கை வெளியாகி பெரிய சர்ச்சையை கிளப்பி உள்ளது. இந்த அறிக்கை அதிர்ச்சியளிக்கும் வகையில், 51 நபர்களின் வாக்குமூலம் பற்றி,
235 பக்கங்கள் கொண்ட இந்த ஆவணத்தில் 65 பக்கங்கள் தனிப்பட்ட தனியுரிமையைப் பாதுகாப்பதற்காகத் திருத்தப்பட்டது.

குறிப்பாக, 3 முக்கிய புள்ளிகள் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது.  அந்த அறிக்கையில், “மலையாள திரையுலகில் நடிகைகளை பாலியல் ரீதியாக பயன்படுத்தும்  வழக்கம் உள்ளது. Adjustments செய்ய கட்டாயப்படுத்தப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. காஸ்டிங் கவுச் என்பது சினிமா துறையில் நிஜம். பெண்கள் ஹோட்டல் அறையில் தனியாக இருக்க பயப்படுவதாக நடிகைகள் கூறுகிறார்கள்.

பல  இரவுகளில் நடிகைகள் தங்களது அறைகளில் தூங்கி கொண்டு இருக்கும் பொழுது, படத்தில் நடிக்கும் நடிகர்கள் கதவைத் தட்டிக் கொண்டே இருப்பார்கள். கதவை உடைத்து உள்ளே நுழைவார்களோ என்று பயந்த சந்தர்ப்பங்களும் உண்டு. இதனால் பெரும்பாலானோர் பெற்றோருடன் படப்பிடிப்புக்கு வருகின்றனர். பல நடிகைகள் அளித்த வாக்குமூலத்தின்படி, ஐபிசி மற்றும் சட்டங்களின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்ட பல சம்பவங்கள் உள்ளன.

பாலியல் ரீதியாக ஒத்துழைக்கும் நடிகைகளுக்கு மலையாள திரையுலகில் பட வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. பாலியல் உறவுக்கு சம்மதிக்கும்படி தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் கட்டாயப்படுத்துகின்றனர். முத்தம், நிர்வாணக் காட்சிகளில் நடிக்க கட்டாயப்படுத்தப்படுகின்றனர். மறுக்கும் நடிகைகளுக்கு மிரட்டல் விடுக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. தனிப்பட்ட முறையில் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் காரணமாகவே நடிகைகள் போலீசில் புகார் அளிக்க முன் வருவதில்லை.

மேலும், நடிகைகளை பாலியல் ரீதியாக மிரட்டும் நடிகர்களின் பட்டியலில், முன்னணி நடிகர்களே அதிகம் இருப்பதாகவும் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளது. அது மட்டும் இல்லாமல் அந்த அதிர்ச்சிகரமான அறிக்கையில், மலையாளத் துறையில் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் உட்பட மொத்தம் 15 ஆண் பிரபலங்கள் கொண்ட ஒரு மாபியா கும்பல் பிடியில்தான், மொத்த மலையாள சினிமாவும் அடங்கியிருக்கிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரைப்படத் தளங்களில் கழிப்பறைகள் மற்றும் உடை மாற்றும் அறைகள் போன்ற அடிப்படை வசதிகளை வழங்கத் தவறியதன் மூலம் பெண்களின் உரிமைகள் மீறப்படுவதையும் அந்த அறிக்கை சுட்டிகாட்டிள்ளது. மாதவிடாயின் போது படப்பிடிப்பு தளத்தில் நடிகைகள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் கூறப்படுகிறது.

நடிகைகள் சிறுநீர் கழிக்க முடியாமல் பல மணிநேரம் படப்பிடிப்பில் இருக்க வேண்டியுள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது. மலையாள திரையுலகில் உள்ள பலர் சிறுநீர் தொற்று போன்ற நோய்களால் அவதிப்பட்டு வருகின்றனர். பல சமயங்களில் பெண்களை கழிவறையைப் பயன்படுத்தக் கூட அனுமதிப்பதில்லை என்று நீதிபதி ஹேமா ஹேமா கமிட்டி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்