அச்சச்சோ ..சளி பிடிச்சிருச்சா.. அப்போ இந்த தவறுகளை செஞ்சுறாதீங்க..!
சென்னை :சளி இருமல் இருக்கும் போது .சில தவறுகளை செய்யக்கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
நல்ல தூக்கம்;
சளி பிடித்து இருக்கும்போது நம்மில் பலரும் சரியாக தூங்க மாட்டோம் இது தவறான செயலாகும். சளி பிடித்திருக்கும் போது தான் நம் உடலுக்கு அதிக எதிர்பாற்றல் தேவை. இதற்கு குறைந்தது 7 மணி நேரமாவது தூங்குவது அவசியம் .மாலை நேரத்தில் மிதமான சுடு தண்ணீரில் குளித்தால் இரவு நல்ல தூக்கம் கிடைக்கும்.
இனிப்பு சுவையை தவிர்த்தல்;
சளி இருக்கும் சமயத்தில் சர்க்கரை கலந்த பால், டீ, காபி மற்றும் இனிப்பு பதார்த்தங்களை தவிர்க்க வேண்டும். இரவு தூங்கும் முன் பாலில் மஞ்சள் கலந்து சர்க்கரை சேர்க்காமல் பருகி வந்தால் ஆழ்ந்த தூக்கம் உண்டாகும் .இருமல் வருவது குறைக்கப்படும். தொண்டை வலியும் குணமாகும்.
ஆல்கஹாலை தவிர்த்தல்;
சளி பிடித்திருக்கும் போது ஒரு சிலர் ஒரு பெக் அடித்தால் சரியாகிவிடும் என்று கூறுவார்கள், இது முற்றிலும் தவறு. சளி இருமல் இருக்கும்போது ஆல்கஹால் எடுத்துக் கொண்டால் மூக்கடைப்பை அதிகப்படுத்தும். உடலில் எதிர்ப்பு சக்தியை குறைத்து விரைவில் சளி குணமாகாமல் தடுக்கும். மேலும் இதனுடன் மாத்திரைகள் எடுத்துக் கொண்டாலும் எந்தப் பயனும் அளிக்காது.
மூக்கடைப்புக்கான மருந்துகள்;
சளி இருக்கும் சமயத்தில் ரன்னிங் நோஸ் என்று சொல்லக்கூடிய மூக்கு ஒழுகுதல் பிரச்சனை இருக்கும் .இதற்கு மருந்து எடுத்துக் கொள்ளும் போது மூக்கடைப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதற்காக தொடர்ந்து ஒரு சிலர் ஸ்பிரே,இன்ஹலர்ஸ்[ inhaler] பயன்படுத்துவார்கள் ,அவ்வாறு செய்யக்கூடாது . தொடர்ந்து பயன்படுத்தாமல் எப்போதாவது பயன்படுத்திக் கொள்ளலாம்.
டீ குடிப்பதை தவிர்க்க வேண்டும்;
சளி பிடித்திருக்கும் நேரத்தில் அதிகமாக காபி ,டீ குடிக்கக் கூடாது. காலை நேரம் இஞ்சி சேர்த்து டீ அருந்துவது சிறந்தது. அதிகமாக டீ, காபி எடுத்துக் கொள்ளும் போது உடலில் நீர் இழப்பை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். சளி இருமல் இருக்கும் சமயத்தில் நீர்ச்சத்து நம் உடலுக்கு அவசியமானது. டீ, காபிக்கு பதில் மிளகு சேர்க்கப்பட்ட காய்கறி சூப் அல்லது ஆட்டுக்கால் சூப் போன்றவற்றை குடித்து வரலாம்.மேலும்ஆவி பிடித்தல், வெற்றிலை கஷாயம் போன்றவற்றை செய்து குடித்து வருவது நல்ல பலனை கொடுக்கும் .
வெற்றிலை கஷாயம் செய்முறை ;
1 டம்ளர் தண்ணீரில் 1 வெற்றிலை ,அரை ஸ்பூன் சீரகம் ,10 மிளகு , கால் ஸ்பூன் மஞ்சள் ,துளசி 6-7,ஓம வல்லி [கற்பூரவல்லி ]2 இலைகள் சேர்த்து மிதமான தீயில் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் அரை கிளாஸாக வரும் வரை கொதிக்க வைத்து காலை ,மாலை என 3 நாட்கள் குடித்து வந்தால் சளியினால் ஏற்பட்ட தலை பரம் ,தலை வலி குறையும் .
ஆகவே மேற்கூறிய இந்த தவறுகளை நீங்கள் செய்து வந்தால் அவற்றை தவிர்க்க முயற்சி செய்யுங்கள்.இயற்கையான முறையில் சளியின் தீவிரத்தை குறைத்து கொள்ளுங்கள் .