ஜம்மு காஷ்மீர், ஹரியானா தேர்தல் தேதிகள் இதோ… தேர்தல் ஆணையம் அறிவிப்பு.!

Election commission of India chief Rajiv Kumar

டெல்லி : மகாராஷ்டிரா, ஹரியானா, ஜார்கண்ட், ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நாட்கள் பற்றிய விவரங்களை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தற்போது இன்று அறிவிப்பார் என முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இன்று டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் , ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநில சட்டமன்ற தேர்தல் பற்றிய விவரங்களை மட்டும் அறிவித்தார்.

ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தல் :

மொத்த சட்டமன்ற தொகுதிகள் – 90.

முதல் கட்டத்தேர்தல் (24 தொகுதிகள்) : 

வேட்புமனு தாக்கல் தொடங்கும் தேதி : ஆகஸ்ட் 20.

வேட்புமனு தாக்கல் கடைசி தேதி : ஆகஸ்ட் 27.

வேட்புமனு பரிசீலனை : ஆகஸ்ட் 28.

வேட்புமனு வாபஸ் பெற கடைசி தேதி : ஆகஸ்ட் 30.

முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் நாள் : செப்டம்பர் 18. 

இரண்டாம் கட்ட தேர்தல் (26 தொகுதிகள்) :

வேட்புமனு தாக்கல் தொடங்கும் தேதி : ஆகஸ்ட் 29.

வேட்புமனு தாக்கல் கடைசி தேதி : செப்டம்பர் 5.

வேட்புமனு பரிசீலனை தேதி : செப்டம்பர் 6.

வேட்புமனு வாபஸ் பெரும் நாள் : செப்டம்பர் 9.

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் நாள் : செப்டம்பர் 25.

மூன்றாம் கட்டத் தேர்தல் (40 தொகுதிகள்) :

வேட்புமனு தாக்கல் தொடங்கும் நாள் : செப்டம்பர் 5.

வேட்புமனு தாக்கல் கடைசி தேதி : செப்டம்பர் 12.

வேட்புமனு பரிசீலனை செய்யும் தேதி : செப்டம்பர் 13.

வேட்புமனு வாபஸ் பெரும் தேதி : செப்டம்பர் 17.

மூன்றாம் (கடைசி) கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தேதி :  அக்டோபர் 1.

ஹரியானா சட்டமன்ற தேர்தல் :

மொத்த தொகுதிகள் – 90.

வேட்புமனு தாக்கல் தொடங்கும் நாள் : செப்டம்பர் 5.

வேட்புமனு தாக்கல் கடைசி தேதி : செப்டம்பர் 12.

வேட்புமனு பரிசீலனை செய்யும் தேதி : செப்டம்பர் 13.

வேட்புமனு வாபஸ் பெரும் தேதி : செப்டம்பர் 16.

வாக்குப்பதிவு நடைபெறும் தேதி :  அக்டோபர் 1.

ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இரண்டும் அக்டோபர் மாதம் 4ஆம் தேதி வெளியாக உள்ளது.

மஹாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்படாமல் இருப்பது குறித்து தலைமை தேர்தல் அதிகாரி ராஜிவ் குமார் கூறுகையில், ” கடந்த முறை, மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா சட்டசபை தேர்தல்கள் ஒன்றாக நடந்தன. அந்த நேரத்தில், ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடைபெறவில்லை. ஆனால் இந்த முறை இந்த ஆண்டு 4 தேர்தல்கள் உள்ளன, அதனை அடுத்து உடனடியாக டெல்லியில் 5வது தேர்தலும் நடைபெறும் நிலை உள்ளது.

ஜம்மு காஷ்மீர், ஹரியானா, மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மற்றும் டெல்லியில் சட்டமன்ற தேர்தல்கள் அடுத்தடுத்து தொடங்க உள்ளது. பாதுகாப்பு படைகளை கருத்தில் கொண்டு நாங்கள் 2 மாநிலத் தேர்தல்களை மட்டும் தற்போது ஒன்றாக நடத்த முடிவு செய்துள்ளோம். மகாராஷ்டிராவில் பெய்து வரும் பலத்த மழை, அடுத்தடுத்த பண்டிகைகள் வரவுள்ளதால் மகாராஷ்டிரா தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும்,” என ராஜீவ் குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்