கைவிரல் சொடக்கு எடுப்பது சரியா? தவறா? இதோ அதற்கான தீர்வு..!

knuckles crack

Chennai- நம்மில் சிலர் சலிப்பாக இருந்தாலோ அல்லது டென்ஷனாக இருந்தாலோ  புத்துணர்ச்சிக்காக சொடக்கு எடுக்கும் பழக்கத்தை வழக்கமாக வைத்திருப்போம்.. இப்படி சொடக்கு எடுப்பதால் ஏதேனும் ஆபத்து ஏற்படுமா என்றும்  சொடக்கு எடுக்கும்போது ஏற்படும் சத்தம் எங்கிருந்து வருகிறது என  சந்தேகம் நமக்கு இருக்கும்.

நாம் சுலபமாக மடக்க கூடிய  மூட்டுகள் என்றால் அது கை விரல்கள் தான். கை மட்டும் அல்லாமல் நம்மில்  பலரும் கழுத்து மற்றும் இடுப்பு பகுதியில் நெட்டை எடுக்கும் பழக்கம் இருக்கும். குறிப்பாக இந்த பழக்கம் ஒரே இடத்தில் வேலை செய்பவர்களுக்கு அதிகமாக இருக்கும். சொடக்கு எடுத்தல் என்பதை நெட்டை எடுத்தல் என்றும் சிலர் கூறுவார்கள்.. அப்படி சொடக்கு போடும்போது ஒரு சத்தம் வரும். இது விரல் மூட்டுகளில் உருவாகுவது ஆகும் .அதாவது விரல் மூட்டுகளுக்கு இடையே சைனோவியல் ஃப்ளூயிட்  என்ற திரவம் இருக்கும் .இது நைட்ரஜன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு சேர்ந்த திரவமாகும். இந்தக் காற்று குமிழிகள் நெட்டை எடுக்கும் போது வெளியேற்றப்படும். அதுதான் சத்தமாக நமக்கு கேட்கும்.

இந்த திரவம் மீண்டும் உருவாக அரை மணி நேரம் எடுத்துக்கொள்ளும். அதனால் தான் நாம் திரும்ப நெட்டை எடுக்கும் பொழுது சத்தம் வருவதில்லை.  . இதனால் டென்ஷனோ  அல்லது சலிப்போ  குறையும் என்று எந்த ஒரு ஆராய்ச்சிகளும் குறிப்பிடவில்லை ஆனால் சைக்காலஜியின் படி   நல்ல புத்துணர்ச்சியான மனநிலையை ஏற்படுத்துகிறது என ஆய்வு கூறுகிறது.

நெட்டை எடுப்பதால் ஆபத்துகள் ஏற்படுமா?

இதைப் பற்றி பல ஆண்டுகளாக பல ஆய்வுகள் நடத்தப்பட்டது. அதன்படி ஆய்வின் முடிவில் நெட்டை எடுப்பதால்  எந்த ஆபத்தும் இல்லை என்றும், ஒரு சில ஆய்வுகளில் அடிக்கடி நெட்டை எடுத்தால் தான்  கை வீக்கம், தசைநார் பாதிப்பு போன்ற சில பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று  கூறுகிறது.

அது மட்டுமல்லாமல் கழுத்து பகுதியில் சொடக்கு எடுப்பதை தவிர்ப்பது நல்லது .ஏனென்றால் நம் கழுத்து பகுதியில் தான் தண்டுவடம் உள்ளது. அதை சுற்றி நம் கை கால்களுக்குச் செல்லும் நரம்புகள் இருக்கும். அடிக்கடி கழுத்தை திருப்புவதால் தண்டுவட நரம்புகளில் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் கழுத்து மற்றும் இடுப்பு பகுதியில் சொடக்கு எடுப்பதை தவிர்ப்பது நல்லது. இதற்கு பதில் புத்துணர்ச்சிக்காக கழுத்து மற்றும் இடுப்பு பகுதிகளில்   மசாஜ் செய்து கொள்வது தான் சிறந்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்