தங்கலானுக்கு திறந்தது வழி.. சென்னை உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு.!

Madras High Court - Thangalaan

சென்னை : பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படத்தை வெளியிட எந்த தடையும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் புதிய தோற்றத்தில் நடித்துள்ள ‘தங்கலான்’ திரைப்படம் நாளை ஆகஸ்ட் 15 ஆம் தேதி கீர்த்தி சுரேஷின் ரகு தாத்தா மற்றும் அருள்நிதியின் டிமான்டி காலனி 2 உடன் மோதவுள்ளது. முன்னதாக, கடன் பிரச்னையில் படத்தை வெளியிடும் முன் 1 கோடி ரூபாயை டெபாசிட் செய்ய வேண்டும் என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதாவது, சென்னையை சேர்ந் அர்ஜுன்லால் சுந்தர்தாஸ் என்பவரிடம் பலவி ஐபிக்கள் பணம் கொடுத்து வைத்துள்ளனர். அதனை அவர் பலருக்கு கடனாகக் கொடுத்து அந்த பணம் திரும்பி கிடைக்கவில்லை. இதில் நிதி இழப்பு ஏற்பட அவர் திவாலானவராக அறிவிக்கப்பட்டார். பின்னர் அர்ஜுன்லால் மறைந்த பின், அவருடைய சொத்துக்களை சொத்தாட்சியர் நிர்வகித்து வருகிறார்.

அர்ஜூன்லால் சுந்தர்தாசிடம், ஞானவேல்ராஜா கடந்த 2013ஆம் ஆண்டு ரூ.10 கோடி 35 லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார். இந்த தொகையை வட்டியுடன் திருப்பிக் கேட்டு சொத்தாட்சியர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், சி.வி.கார்த்திகேயன் அமர்வு இடைக்கால உத்தரவை பிறப்பித்தது. அந்த உத்தரவில், தங்கலான் படத்தை வெளியிடும் முன், அதாவது ஆகஸ்ட் 14ஆம் தேதிக்குள் ரூ. 1 கோடி டெபாசிட் செய்ய வேண்டும். அப்படி பணத்தை செலுத்தினால், படத்தை வெளியிடலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்த உத்தரவின்படி, ரூ.1 கோடி பணத்தை சொத்தாட்சியர் கணக்கில் செலுத்தியதாக ஸ்டுடியோ கிரீன் தரப்பில் தெரிவித்ததையடுத்து, ‘தங்கலான்’ படத்தை வெளியிட அனுமதி அளித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

பணம் டெபாசிட் செய்யப்பட்டதால் படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில், ரூ.10 கோடி கடனை செலுத்தாத விவகாரம் தொடர்பான வழக்கு ஆகஸ்ட் 28-ம் தேதிக்கு  தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்