ஐபிஎல் தொடரில் ஸ்டீவ் ஸ்மித்? வெளியான சூப்பர் தகவல்!

Steve Smith Interested in IPL

ஐபிஎல் : அடுத்த ஆண்டில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் ஆஸ்திரேலிய முன்னாள் வீரரான ஸ்டீவ் ஸ்மித் கலந்து கொள்ளப் போகிறார் என ஒரு தகவல் பரவலாகப் பரவி வருகிறது.

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான ஸ்டீவ் ஸ்மித், ஐபிஎல் தொடரில் கடந்த 2021-ம் ஆண்டு டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்காக விளையாடினார். அதன் பிறகு அவர் ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை. இதற்குக் காரணம் ஐபிஎல் அணிகள் மிகப்பெரிய கிரிக்கெட் நட்சத்திரத்த வீரர்களை புறக்கணித்ததால், கடந்த சில ஆண்டுகளாக ஏலத்தில் ஏராளமான வீரர்கள் விற்கப்படாமல் போனார்கள். அதில் நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித்தும் ஒருவர் தான்.

ஐபிஎல்லுக்கு திரும்பும் ஸ்டீவ் ஸ்மித் ..!

தற்போது, ​​இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள மெகா ஏலத்தில் தனது பெயரைக் கொடுப்பதாக ஸ்டீவ் ஸ்மித் கோட் ஸ்போர்ட்ஸ் (CODE Sports) என்ற தனியார் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் உறுதி செய்துள்ளார். அந்த பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியில், “நான் மீண்டும் ஒருமுறை ஐபிஎல் தொடரில் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறேன். நான் எனது பெயரை ஏலத்தில் வைப்பேன்” என ஸ்டீவ் சுமித் கூறி இருக்கிறார்.

கடந்த 2010-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமான ஸ்டீவ் ஸ்மித், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ், கொச்சி டஸ்கர்ஸ் கேரளா, ராஜஸதன் ராயல், டெல்லி கேபிட்டல்ஸ் எனப் பல அணிகளில் விளையாடி அசத்தி இருக்கிறார். இவரது தனித்துவமான ஆட்டத்திற்குத் தனிப்பட்ட ஒரு ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது.

இதனால், ஐபிஎல் தொடர்க்கு திரும்பும் அவரது இந்த முடிவு அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாகவே இருக்கிறது. மேலும், ஏலத்தில் அவரை எடுப்பதற்கு ஐபிஎல் அணிகள் போட்டியிடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இவர் ஐபிஎல் தொடரில் மட்டும் 103 போட்டிகளில் விளையாடி அதில் 2485 ரன்கள் எடுத்து அசத்தி உள்ளார். அதில் 1 சதமும், 11 அரை சதமும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்