ரூ. 25 000 லஞ்சம் …!அதிரடியாக கைது செய்யப்பட்ட மோட்டார் வாகன ஆய்வாளர் மற்றும் ஆய்வாளரின் உதவியாளர்…!
விழுப்புரம் அருகே லஞ்சம் வாங்கிய மோட்டார் வாகன ஆய்வாளர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
விழுப்புரம் அருகே கள்ளக்குறிச்சியில் ரூ. 25 000 லஞ்சம் வாங்கிய மோட்டார் வாகன ஆய்வாளர் பாபு கைது செய்யப்பட்டுள்ளார்.அதேபோல் மோட்டர் வாகன ஆய்வாளரின் உதவியாளர் செந்தில்குமாரையும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் கைது செய்தனர். வாகனத் தகுதிச் சான்று பெற முத்துகுமாரிடம் ரூ. 25000 லஞ்சம் பெற்றபோது மோட்டார் வாகன ஆய்வாளர் பாபு மற்றும் ஆய்வாளரின் உதவியாளர் செந்தில்குமர் சிக்கினார்கள்.