அடடா! கங்குவா டிரைலரில் கார்த்தி? இதை கவனிச்சீங்களா!!
சென்னை : சூர்யா நடித்து வரும் கங்குவா படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இப்படியான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் படம் குறித்த அசத்தலான அப்டேட்டுகளை படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஸ்டூடியோ க்ரீன் வாரிவழங்கி கொண்டு இருக்கிறது. அந்த வகையில், படத்தின் டிரைலரை தமிழ், தெலுங்கு, ஹிந்தி மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் படக்குழு வெளியிட்டுள்ளது.
அந்த டிரைலரில் இடம்பெற்ற காட்சிகள் மற்றும் சூர்யா பேசும் வசனங்கள் என அணைத்தும் மக்களை வெகுவாகவே கவர்ந்துள்ளது. VFX முதல் டிரைலரில் வரும் இசையை முதற்கொண்டு பாராட்டி வருகிறார்கள். அந்த டிரைலரில் வரும் எல்லா காட்சிகளும் அருமையாக இருக்கிறது. அதில் சஸ்பென்ஸாகவும் ஒரு காட்சி இடம்பெற்றது.
அது என்ன காட்சி என்றால் டிரைலரின் கடைசி காட்சியில் சூர்யா யாரையோ பார்க்கிறார். அப்போது ஒருவர் குதிரையில் வந்துகொண்டு இருக்கிறார். அவர் யார் என்று முகத்தை காட்டவில்லை. ஏற்கனவே, கார்த்தி இரண்டாவது பாகத்தில் நடிப்பார் என்ற தகவல் வெளியாகி இருந்த நிலையில், அந்த டிரைலரில் வருவது அவர் தான் என தெரிய வந்து இருக்கிறது.
முதல் பாகத்திற்கு எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கும் என்பதை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். அதைப்போலவே, இரண்டாவது பாகத்தின் மீது முதல் பாகம் வெளியாவதற்கு முன்பே அதிகரித்துள்ளது. அதற்கு முக்கியமான காரணமே இரண்டாவது பாகத்தில் கார்த்தி நடிப்பது தான். கங்குவா படத்தில் கார்த்தி நடிப்பது உறுதி என்பது பலருக்கும் தெரிந்த விஷயம் தான். இந்த சூழலில் டிரைலரில் அவர் இருப்பதாக வெளிவந்துள்ள தகவலால் அவரும் கங்குவா முதல் பாகத்தில் வருவார் என்று இன்னுமே படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
டிரைலரை பார்த்த ரசிகர்கள் பலரும் அந்த காட்சியில் வருவது கார்த்தி தான். கண்டிப்பாக சூர்யாவுக்கும் – கார்த்திக்கும் சண்டை காட்சி இருக்கும். கங்குவா படம் பெரிய சம்பவம் செய்ய போகிறது என்று பேசி வருகிறார்கள் . உண்மையில் அந்த காட்சியில் வருவது கார்த்தி தானா? அல்லது யாரும் எதிர்பார்க்காத வகையில் வேறு யாருமா என்கிற டிவிஸ்ட் இருக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.