மனைவியா? நண்பனா? உங்க பிசினஸ்ல சரியான கூட்டாளி யார்.!
சென்னை : உங்கள் பிசினஸில் சரியான கூட்டாளியை தேர்ந்தெடுப்பது வெற்றிக்கு முக்கியமான ஒன்றாகும். உங்கள் மனைவி அல்லது துணையுடன் ஒரு தொழிலைத் தொடங்குவது என்பது ஒரு தனித்துவமான நல்ல முடிவாகும்.
இந்தியாவில் உள்ள பல தம்பதிகள் தங்கள் தொழில் முயற்சிகளில் பொறாமைப்படத்தக்க வெற்றியை அடைந்துள்ளனர், அவர்களின் தொழில்கள் மிக வேகமாக வளர்ந்து வருகின்றன.
தொழிலில் மனைவி, நண்பர் அல்லது வேறு ஒருவரை கூட்டாளியாக தேர்ந்தெடுப்பது குறித்து பல யோசனைகளை வைத்திருக்கீர்களா? இதில் ஒருவரை தேர்ந்தெடுப்பதில் நன்மைகள் மற்றும் சவால்கள் நிறைந்ததுள்ளது.
துணை தான் சரியான தேர்வு
ஆனால், உங்க பிசினஸ் பார்ட்னராக இருப்பதற்கு தகுதியானவர் உங்க மனைவி அல்லது காதலி தான் சரியான தேர்வு என்று சைக்காலஜிஸ்ட் மீனா கமலகண்ணன் கூறுகிறார். அதாவது, பிசினஸ் என்று வரும்பொழுது, நான் இந்த பணியை செய்கிறேன், நீ இதை பாத்துக்கோ என்று உங்களுக்குள் ஒரு ஒற்றுமை இருந்தால் போதும்.
எதை செய்ய கூடாது
அதுவே, நீ ஏன் அதை செய்கிறாய், அதை நீ செய்யாத என்று உங்களுக்குள் போட்டி பொறுமை வந்து விட்டாலோ அல்லது உனக்கு இது தெரியவில்லை என்று கூறினாலோ அது பிசினஸுக்குள் கருத்து வேறுபாட்டை உண்டாக்கும்.
எதை செய்ய வேண்டும்
அது மட்டும் இல்லாமல், பிசினஸ் என்று வரும்பொழுது உங்கள் துணைவி அல்லது துணைவன் என கூட்டாளியாக உழைத்தால், இது நம்ம பிசினஸ் என்றும், நம் செய்யும் வேலையை பையமுடனும் கவனமாகவும் செய்வோம். இதனால், உங்கள் பிசினஸ் மேலும் முன்னேற்றம் அடையும்.
குறிப்பாக, செலவுகளை இரண்டு நபர்களும் இணைந்து கவனித்தாலே போதும். அந்த குடும்பம் மெம்மேலும் முன்னேற்றம் அடையும். கணவன் – மனைவி ஆகிய இருவரும் தனிப்பட்ட செய்யும் செலுவுகளை என்னெவென்று மூக்கை நுழைக்கும் பழக்கத்தை வைகார்த்தீர்கள்.
மனைவியை பிசினஸ் கூட்டாளியாகக் கொள்வதில் சில முக்கியமான நன்மைகள் உள்ளன. இவை உங்கள் சொந்த வாழ்க்கையிலும், வணிக வளர்ச்சியிலும் பல நன்மைகளை ஏற்படுத்த முடியும்.
பிஸ்னஸ் கூட்டாளியாக மனைவி இருந்தால் நன்மைகள்
- ஒரு திருமண உறவு எப்படி ஆழ்ந்த நம்பிக்கை மற்றும் புரிதலுடன் இருகிறதோ அதுபோல் பிசினஸை நம்பிக்கை உடனும் புரிதலுடன் எடுத்து செல்வோம்.
- தொழிலின் வெற்றிக்கு மனைவி சமமாக அர்ப்பணிப்புடன் இருப்பார்.
- மனைவியுடன் கைகோர்ப்பது, நீங்கள் அவரை முழுமையாக நம்பலாம். இது முடிவுகளை எடுப்பதில் உங்களுக்கு மனஅமைதி தரும்.
- மனைவி உங்கள் மீதான காதலால், வணிக வளர்ச்சிக்கு தேவையான நேர்மையான கருத்துக்களை வழங்குவர்.
- மனைவி உங்கள் சக்திகள் மற்றும் பலவீனங்களை நன்கு அறிந்திருப்பார். இதனால், பிசினஸில் தேவைகளை புரிந்து கொண்டு அதற்கான சரியான முடிவுகளை எடுப்பார்.
நண்பரை வணிக கூட்டாளியாக தேர்ந்தெடுப்பது பல நன்மைகளை வழங்கும் போது, சில சவால்களையும் ஏற்படுத்தக்கூடும்.
பிஸ்னஸ் கூட்டாளியாக நண்பர் இருந்தால் நசவால்கள்
- தொழில் ஏற்படும் கருத்து வேறுபாடுகள் மற்றும் சிரமங்கள் நண்பருடனான நெருக்கமான உறவை பாதிக்கக்கூடும்.
- பிசினஸ் ரீதியாக விருப்பமில்லாத முடிவுகளை எடுக்க வேண்டும் என்றா, நண்பருடன் மூஞ்சை கொடுத்து பேசுவது சிரமமாக இருக்கலாம். இது நெருக்கமான முடிவு எடுக்கும் போது சிரமமாக மாறலாம்.
- பிசினஸில் ஏற்படும் பிரச்சனைகளை நேரடியாக தீர்க்க முடியாத நிலைமை கூட ஏற்படலாம்.
- பிசினஸ் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை இடையே பிரித்துப் பார்ப்பது சிரமமாக இருக்கும்.
- பிசினஸில் லாபத்தையும், பொறுப்புகளையும் சரியாக பிரிக்காவிட்டால், ஒருவருக்கு அதிக வேலை, மற்றவருக்கு குறைவாக வேலை என்ற நிலைமை உருவாகி, மனஸ்தாபம் ஏற்படுத்தலாம்.