சன்டே ஸ்பெஷல்.. செட்டிநாடு ஸ்டைலில் கோழி குழம்பு செய்யலாமா?..
chicken curry-செட்டிநாடு கைப்பக்குவத்தில் அசத்தலான கோழி குழம்பு செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்..
தேவையான பொருட்கள்;
- சிக்கன்= அரை கிலோ
- எண்ணெய்= தேவையான அளவு
- தயிர்= 3 ஸ்பூன்
- மஞ்சள் தூள் =அரை ஸ்பூன்
- சிக்கன் மசாலா =1 ஸ்பூன்
- மிளகாய்த்தூள் =அரை ஸ்பூன்.
தாளிக்க தேவையானவை;
- இஞ்சி பூண்டு பேஸ்ட் =2 ஸ்பூன்
- வெங்காயம்= இரண்டு
- தக்காளி =இரண்டு
மசாலா அரைக்க தேவையானவை;
- பிரிஞ்சி இலை= இரண்டு
- கிராம்பு= இரண்டு
- பட்டை= இரண்டு
- கல்பாசி =இரண்டு
- மராத்தி மொக்கு = ஒன்று
- ஏலக்காய்= 2
- அண்ணாச்சி பூ= ஒன்று
- தேங்காய்= ஒரு கப்[ துருவியது]
- சீரகம்= ஒரு ஸ்பூன்
- மிளகு= அரை ஸ்பூன்
- சோம்பு= அரை ஸ்பூன்
- கொத்தமல்லி விதை= இரண்டு ஸ்பூன்
- வர மிளகாய் =4
செய்முறை;
முதலில் ஒரு பாத்திரத்தில் மசாலா அரைக்க தேவையான பிரிஞ்சி இலை , பட்டை கிராம்பு ஏலக்காய், கல்பாசி, சீரகம், மிளகு, மல்லி ஆகியவற்றை எண்ணெய் சேர்க்காமல் வறுத்து ஆற வைத்து நன்கு பவுடராக்கி கொள்ளவும் .பிறகு தேங்காயையும் தனியாக அரைத்துக் கொள்ளவும். இப்போது குக்கரில் எண்ணெய் ஊற்றி அரைத்த மசாலா பவுடரை சேர்த்து கிளறி அதிலே வெங்காயம் இஞ்சி பூண்டு பேஸ்ட்சேர்த்து வதக்கி பிறகு தக்காளியும் சேர்த்து வதக்கி கொள்ளவும் .
பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள், சிக்கன் மசாலா ஆகியவற்றையும் சேர்க்கவும். அதனுடன் சிக்கன் மற்றும் தயிர் , தேவையான அளவு உப்பு ,அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து கலந்து இரண்டு விசில் விட்டுக் கொள்ளவும் விசில் அடங்கியதும் அரைத்து வைத்துள்ள தேங்காயை சேர்த்து கருவேப்பிலையும் சேர்த்து ஒரு விசில் விட்டு இறக்கினால் கமகமவென செட்டிநாடு ஸ்டைலில் கோழி குழம்பு ரெடி.