நடைப்பயிற்சி செய்ய சிறந்த நேரம் காலையா ?மாலையா ? .. வாங்க தெரிஞ்சுக்கலாம்..!
Exercise-காலையில் நடைப்பயிற்சி செய்வது நம் உடலுக்கு நல்லதா அல்லது மாலையில் செய்தால் நல்லதா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும் .அதைப்பற்றி இங்கே காணலாம் .
நடை பயிற்சி செய்ய உகந்த நேரம் ;
தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் அமர்ந்து கொண்டு பார்க்கும் வேலையை தான் செய்கின்றனர். இதனால் பெரிதாக நம் கால்களுக்கு வேலை கொடுப்பதில்லை. இதனால் கால் வலி போன்ற பல உடல் அசவ்ரியங்களை அனுபவித்திருப்பீர்கள். அதற்காக பலரும் உடற்பயிற்சி யோகா போன்றவற்றை காலை மற்றும் மாலை நேரத்தில் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் உடற்பயிற்சியை செய்யாதவர்கள் நடைப்பயிற்சியாவது கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். அதிலும் காலையில் நடை நடை பயிற்சி செய்வதை விட மாலையில் செய்வது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை பெற்று தரும் என்று மருத்துவர்கள் ஆலோசனை கூறுகின்றனர். மாலை 4 மணியில் இருந்து 6;30க்குள் சூரியன் மறைய துவங்கிவிடும். இந்த சமயத்தில் நடைப்பயிற்சி செய்வது நல்லது.
காலை நேரத்தில் நம் தசைகள் இறுக்கமாக இருக்கும். இதனால் நம் நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்யும் போது அந்த இறுக்கம் குறையும் .ஆனால் மாலையில் செய்யும்போது ஏற்கனவே நம் தசைகள் பிருஷ்காக இருக்கும் இந்த நேரத்தில் செய்யும்போது தசைகளில் சுளுக்கு ஏற்படுவது குறைக்கப்படுகிறது .
அது மட்டுமல்லாமல் ஆழ்ந்த தூக்கம் வேண்டும் என்று நினைப்பவர்கள் மாலையில் நடைப்பயிற்சி மேற்கொள்வது சிறந்தது .ஏனென்றால் என்டோர்பின் என்ற ஹார்மோன் அதிகமாகி மெலடோனின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும். இந்த மெலடோனின் தான் நம் உடலுக்குள் இருக்கும் கடிகாரமாகும். இந்த ஹார்மோன் சரியாக இருந்தால்தான் நமக்கு தூக்கம் நன்றாக வரும். மேலும் ஸ்ட்ரெஸ் ஏற்படாமல் இருக்கும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர் .
மேலும் காலை நேரத்தில் நடை பயிற்சி செய்யும் போது அன்றைய நாளை பற்றியும் வேலையைப் பற்றிய எண்ணங்களை யோசித்துக் கொண்டே செல்வோம் இதனால் ஒரு அவசர மனநிலையோடு நடைப்பயிற்சி செய்யும் நிலை இருக்கும். ஆனால் மாலை நேரத்தில் நம் மனது ரிலாக்ஸ் ஆக இருக்கும் .இந்த நேரத்தில் வாக்கிங் சென்றால் மனதிற்கு அமைதியை கொடுக்கும்.
அதுமட்டுமல்லாமல் நம் மூளையில் மகிழ்ச்சி ஹார்மோனையும் அதிகரிக்கச் செய்யும். மூளையின் செயல்திறன் அதிகமாக்கவும் மாலை நேர உடற்பயிற்சி உதவுகிறது. மேலும் உடல் எடை குறைப்பு நினைப்பவர்கள் காலையில் செய்வதை விட மாலை நேரத்தில் உடற்பயிற்சி மற்றும் நடை பயிற்சியை செய்யும் போது நல்ல மாற்றத்தை காண முடியும்.
அதற்காக காலையில் செய்யும் நடைப்பயிற்சி பயனில்லையா என நீங்கள் நினைப்பது தெரிகிறது.. அப்படி இல்லை காலையில் நடை பயிற்சி செய்வது தூய்மையான காற்றை சுவாசித்து உடல் புத்துணர்ச்சி பெறும். ஆனால் மாலையில் செய்யும் போது மேலே கூறிய குறிப்பிட்ட நன்மைகள் அதிகம் கிடைக்கும்.