ரீல்ஸ் பண்ணுங்க., 2 லட்சம் பரிசை வெல்லுங்கள்.! சென்னை போலீஸ் அசத்தல் அறிவிப்பு.!

Zero Is Good

சென்னை : சில தினங்களுக்கு முன்னர் சென்னை மாநகராட்சியில் பல்வேறு பிரதான இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் Zero Is Good எனும்  பதாகைகள் வைக்கப்பட்டன. Zero Is Good எனும் விழிப்புணர்வு பதாகைகளின் அர்த்தம் விபத்து எண்ணிக்கை பூஜ்ஜியம் என்பதை குறிக்கிறது.

இந்த பதாகைகளை பல்வேறு இடங்களில் மட்டுமின்றி, ஆட்டோக்கள் மூலமும், போக்குவரத்து காவலர்கள் மூலமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது விபத்து ஏற்படுத்த கூடாது என்பது பற்றிய புதிய விழிப்புணர்வு முயற்சியை சென்னை போக்குவரத்து காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

அதாவது, Zero Accident Day என்ற தலைப்பில் அதாவது விபத்தில்லா நாள் என்ற தலைப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் தாயார் செய்து அனுப்பும் போட்டியை பெருநகர சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.

இந்த ரீல்ஸ் போட்டிக்கான வீடியோக்களை இன்று (ஆகஸ்ட் 9) முதல் வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி வரையில் பெருநகர சென்னை போக்குவரத்து காவல்துறை (Greater Chennai Traffic Police) இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கோ, அதிகாரபூர்வ இணையதள பக்கத்திற்கோ அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் அதிகம் பார்வையாளர்களை (Views) பெரும் ரீல்ஸ்-க்கு 2 லட்சம் ரூபாய் பரிசு தொகையும், நல்ல கருத்துள்ள கதை களம் கொண்ட ரீல்ஸ்-க்கு 1 லட்ச ரூபாய் பரிசு தொகையும், மக்களிடையே அதிக விருப்பத்தை (Likes) பெரும் ரீல்ஸ்-க்கு 50 ஆயிரம் ரூபாய் பரிசு தொகையும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 24ஆம் தேதி எந்த ரீல்ஸ் வெற்றி பெற்றது என அறிவிக்கப்படும் என்று சென்னை போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

தமிழ் , ஆங்கிலம் என எந்த மொழியாக இருந்தாலும் அனுப்பலாம் என்றும் ,  தவறான வீடியோ அனுப்பிவிட்டால் அவர்களுக்கு மறுவாய்ப்பு வழங்கப்படமாட்ட்டாது. அதே போல வேறு ஒருவர் பதிவிட்ட வீடியோ அல்லது அதன் கருப்பொருளை காப்பி அடித்தால் அவர்கள் தகுதிநீக்கம் செய்யபப்டுவர் என்றும் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட வீடீயோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்