குக் வித் கோமாளி 5-க்கு வந்த சோதனை..! ட்ரெண்டே ஆகாத காரணம் இதுதாங்க..!

cook with comali season 5

சென்னை : நாம் எப்போதாவது சோகமாக இருக்கும்போது தொலைக்காட்சியில் சில காமெடியான நிகழ்ச்சியை பார்க்கும்போது மனம் விட்டு சிரித்து சோகத்தை போக்கி கொள்வோம். அதில் பலருடைய சோகத்தை நிகழ்ச்சிகளில் ஒன்று என்றால் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியை சொல்லலாம். சமையல் நிகழ்ச்சி என்றாலும் அதில் காமெடியான பல விஷயங்கள் இருந்த காரணத்தால் மிகவும் ட்ரென்டிங் ஆனது என்றே சொல்லலாம்.

முதல் 4 சீசன்கள் மக்களுக்கு மத்தியில நல்ல வரவேற்பை பெற்று இருந்த நிலையில், 5-வது சீசன் ஓடுகிறதா? என்கிற அளவுக்கு மிகவும் சைலண்டாக ஓடி கொண்டு இருக்கிறது. முந்தய சீசன்களை ஒப்பிட்டு பார்க்கும்போது இந்த சீசன் டிஆர்பியிலும் கூட குறைவாக இருக்கிறது என்று கூட சொல்லலாம். நிகழ்ச்சியில் கோமாளியாக புகழ் எல்லாம் இருந்தாலும் கூட சொல்லும் அளவிற்கு ட்ரெண்ட் ஆகவில்லை.

ட்ரெண்ட் ஆகும் என எதிர்க்கபார்ட்ட நிலையில்,  சர்ச்சையில் தான் சிக்கி கொண்டு இருக்கிறது. குறிப்பாக ராமர் பேசிய வசனங்கள் அதற்கு பதில் அன்ஷிதா அக்பர்ஷா பேசிய வசனங்கள் சர்ச்சையில் சிக்கி இருந்தது. இதனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்த்த ரசிகர்கள் பலரும் குக் வித் கோமாளி. நம்மளோட சேர்ந்து குழந்தைங்களும் ரொம்ப விரும்பி பாக்கறாங்க. அதுல ரொம்ப சகஜமா புழங்கற வாழ்த்தைகள் – பரதே…பொறுக்கி ஆகிய வார்த்தைகள் வருவது முகம் சுழிக்க வைக்கிறது.

இது ரொம்ப ஜாலியான ஷோ…நடு…நடுல இப்படி வந்துடுது என பலரும் கூறினார்கள். இந்நிலையில் பிரபலங்கள் இருந்தாலும் மற்ற சீசன்கள் போல இந்த சீசன் ட்ரெண்ட் ஆகாத காரணம் பற்றி பார்க்கலாம்.

முதல் காரணம் என்னவென்றால், இந்த சீசன் நொடிக்கு நொடி காமெடி வசனங்கள் பேசும் கலக்கப்போவது யாரு பாலா நிகழ்ச்சியில் பங்குபெறாதது தான். இந்த சீசனில் புகழ் இருந்தாலும் கூட அவருடன் சேர்ந்து பாலா செய்யும் காமெடிகளை மக்கள் மிகவும் மிஸ் செய்கிறார்கள் என்றே சொல்லலாம். இதன் காரணமாகவும் குக் வித் கோமாளி 5 ட்ரெண்ட் ஆகாமல் இருக்கிறது என்று கூட சொல்லலாம்.

மற்றோரு காரணம் இதுவரை எல்லா சீசன்களிலும் கோமாளியாக இருந்த சிவாங்கி கடந்த சீசனில் குக் ஆக கலந்துகொண்டு 5-வது சீசனில் கோமாளியாக கூட கலந்து கொள்ளமாட்டேன் என்று அறிவித்துவிட்டார். கோமாளியாக அவர் அடித்த லூட்டிகளை அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிடமுடியாது என்றே சொல்லலாம்.

எனவே, 4 சீசன்கள் அவர் அடித்த லூட்டிகளை ரசித்துக்கொண்டு மக்கள் அவரை தன்னுடைய வீட்டில் ஒரு செல்லப்பிள்ளை என்று பார்த்தார்கள். எனவே அவர் 5-வது சீசனில் இல்லை என்பதால் அவருடைய காமெடி காட்சிகளையும் மக்கள் மிஸ் செய்தார்கள். இதன் காரணமாகவும் குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சி மக்களை பெரிய அளவில் ஈர்க்கவில்லை என்று கூட சொல்லலாம்.

அதைப்போலவே, குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சி பார்க்கும் பார்வையாளர்கள் குறைந்த காரணம் டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சி வந்தது என்றும் சொல்லலாம். அந்த நிகழ்ச்சியும் இது போலவே சமயல் கலந்த காமெடி  நிகழ்ச்சி தான். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக இருந்த பலரும் அந்த நிகழ்ச்சியில் சேர்ந்தார்கள். எனவே, அந்த நிகழ்ச்சிக்கும் தனி பார்வையாளர்கள் உருவான காரணத்தாலும் குக் வித் கோமாளி 5 சரியாக ட்ரெண்ட் ஆகவில்லை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்