சிறகடிக்க ஆசை சீரியல்.. ரோகினியை வெளுத்து வாங்கிய விஜயா.. நடுங்கிப்போன ரோகிணி..!
சிறகடிக்க ஆசை -சிறகடிக்க ஆசை தொடரின் இன்றைக்கான[ஆகஸ்ட் 9] விறுவிறுப்பான கதைக்களத்தை இப்பதிவில் காணலாம் .
மீனா கேசரி செஞ்சி எல்லாருக்கும் கொடுக்குறாங்க. எதுக்கு செஞ்சோம் என்ற காரணத்தையும் சொல்றாங்க.. மாமா நான் கேசரி சீதாவுக்காக மட்டும் செய்யல ரோகினிகாவும் தான் செஞ்சேன் அப்படின்னு சொல்றாங்க. என்ன சொல்றீங்க மீனா எனக்கு ஒண்ணுமே புரியல அப்படின்னு ரோகினி சொல்றாங்க.. ஏங்க ஏன் இன்னும் மறச்சு வச்சிருக்கீங்க நீங்க சொல்லாட்டியும் எனக்கு தெரிஞ்சிருச்சு அப்படின்னு மீனா சொல்றாங்க.. நீங்க அம்மா ஆகப் போறீங்க தானே அப்படின்னு சொல்லுவோமே எல்லாருமே வாழ்த்துக்கள் சொல்றாங்க. முத்து சொல்றாரு பரவால்ல மனோஜ் வாழ்க்கையில எதுவுமே பண்ணாம வாயில வடை சுடுவேன் நினைச்சேன் சாதிச்சிட்டடா வாழ்த்துக்கள்.
இப்ப விஜயா கோவமா கேக்குறாங்க என்னம்மா இது மீனா சொல்லி தான் எனக்கு தெரியணுமா முதல்ல என்கிட்ட தானே நீ சொல்லி இருக்கணும் .இல்ல ஆன்ட்டி அப்படின்னு இழுக்கறாங்க.. மீனா சொல்றாங்க நீங்க குழந்தைகள் ஹாஸ்பிடல் போனதுக்கு எனக்கு தெரியும். ஆமா நா போனோன் தான் அதுக்கு நான் பிரக்னண்டா இருக்கணும்னு அர்த்தம் இல்ல நான் சும்மா செக்கப்புக்கு தான் போனேன் அப்படின்னு சொல்றாங்க. மீனா எதுவுமே தெரியாம நீங்க பாட்டுக்கு சொல்றீங்க ஏன் மீனா இப்படி பண்றீங்க. விஜயாவும் மீனாவ திட்டுறாங்க தேவையில்லாம நீ ஏண்டி மூக்கை நுழைக்கிற நீயா ஒரு முடிவு பண்ணிக்குவியா. சரி விடுங்க ஏதோ மீனா தெரியாம சொல்லிட்டா அப்படின்னு முத்து சொல்றாரு விடு மீனா நீ பீல் பண்ணாத.
ரோகினி கோவமா ரூமுக்கு போயிடறாங்க மனோஜும் பின்னாடியே போறாரு.. மனோஜ் மீனா சொன்னது ஏன் நமக்கு உண்மையிலேயே நடக்கக்கூடாது அப்படின்னு கேக்குறாங்க ரோகினி . நமக்கு இன்னும் டைம் இருக்கு ரோகிணி இப்ப என்ன ஒன் இயர் தானே ஆகுது. எனக்கு குழந்தையை பத்தின கனவெல்லாம் வருது மனோஜ் அப்புடின்னு கனவை பத்தி சொல்லுறாங்க .ஆனா மனோஜ் சொல்றாரு எனக்கு பிசினஸ் பத்தின கனவு தான் ரோகிணி வருது .. ரோகிணி சொல்றாங்க மனோஜ் நமக்கு ஒன் இயர் ஆச்சு நாம ஒரு செக்கப் பண்ணிக்கலாமா அப்படின்னு கேக்குறாங்க .மனோஜ் கோவமா பெட்ல இருந்து எழுந்து போறாரு எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல ரோஹினி நீ வேணும்னா போய் செக் பண்ணிக்கோ அப்படின்னு சொல்லுறாரு .
அது எப்படி இவ்வளவு நம்பிக்கையா சொல்ற.. ஜீவா கூட நீ லிவிங் ல இருக்கும்போது அவ பிரகனண்ட் ஆனாலா அப்படின்னு கேக்குறாங்க . இதைக் கேட்ட மனோஜ் செம டென்ஷனா ஆயிடுறாங்க.. இதே கேள்வியை நான் உன்கிட்ட திருப்பி கேட்கவா அப்படின்னு கேட்டதும் ரோகிணிக்கு கோவம் வந்து மனோஜ் சட்டைய புடிச்சுடறாங்க. இப்ப தெரியுதா இப்படித்தான் எனக்கும் கோபம் வந்துச்சு அப்படிங்கற மாதிரி சொல்றாங்க. சரினு அப்படியே ரெண்டு பேரும் சாரி சொல்லி சமாதானம் ஆயிடறாங்க .ஆனா மனோஜ் ரோகிணி கேட்டது நினைச்சு பீல் பண்ணி வெளில உக்காந்து இருக்காங்க .விஜயா வந்து என்ன மனோஜ் இன்னும் தூங்கலையா. ஒன்னும் இல்லம்மா சும்மா தான் உட்கார்ந்து இருக்கேன் . விஜயா நம்பாம என்னன்னு சொல்லுடா அப்படின்னு கேட்கவும் ரூம்ல நடந்த எல்லாத்தையும் மனோஜ் சொல்லிடுறாரு.
இவ இப்படி எல்லாம் பேசுவாளா வா நான் போய் கேட்கிறேன் என்று ரோகிணி ரூமுக்கு போறாங்க.. என்ன ஆன்ட்டி என்னாச்சுன்னு கேக்குறாங்க ரோகிணி . என்ன ஆச்சுன்னு உனக்கு தெரியாதா அப்படின்னு கோவமா கேட்கவும்.. மனோஜ பார்த்து நீ என்ன கேள்வி கேட்டிருக்கிற இப்படி எல்லாம் நீ கேட்பியா உன்மேல நான் ரொம்ப மரியாதை வைத்திருந்தேன்.. உன்ன பக்குவமான பொண்ணு நினைச்சேன் ஏம்மா உனக்கு மனோஜ் பத்தி முன்னாடியே தெரியும் தானே அப்புறம் எப்படி இந்த மாதிரி ஒரு கேள்வி கேட்ப உனக்கு என்ன அவ்வளவு சந்தேகம் அப்படின்னு திட்டுறாங்க .இங்க பாருமா நான் பார்த்து கூப்பிட்டு வந்த மருமக நீ மனோஜ நீ நல்லா பாத்துக்குற வரைக்கும் தான் உனக்கு நான் மரியாதை கொடுப்பேன்.. அப்படின்னு சொல்றாங்க.மனோஜ் சொல்றாரு விடுங்கம்மா ..
நீ சும்மா இருடா ..அப்படின்னு திட்ட ஆரம்பிக்கிறாங்க இதே கேள்விய மனோஜ் கேட்டிருந்தா ஏற்கனவே உனக்கு குழந்தை உண்டாச்சனு .. உனக்கு எப்படி இருந்திருக்கும் அப்படின்னு கேக்குறாங்க. இதெல்லாம் கேட்டு ரோகிணி ஆடி போய் நிக்கிறாங்க அதோட எபிசோட் முடிந்தது. நாளைக்கு ப்ரோமோல ரவி எல்லாரையும் கூப்பிட்டு எங்க கம்பெனில கப்பிள்ஸ்கு போட்டி வச்சிருக்கிறாங்க. வின் பண்ண அவார்ட் குடுப்பாங்கன்னு சொல்றாங்க அதுக்கு மனோஜ் சொல்றாரு நாங்க வின் பண்ணிடுவோம் ஆனா டைம் வேஸ்ட் பண்ண வேணாம்னு யோசிக்கிறேன் .அதுக்கு ரவி சொல்றாரு வின் பண்ணா ஒரு லட்சம் பணம் தருவாங்கன்னு சொல்றாங்க .. கண்டிப்பா இந்த போட்டியில் மனோஜ் கலந்துக்குவாரு .. ஆனா ஜெயிக்க போறது என்னம்மோ முத்துவும் மீனவும் தான். சரி பொறுத்திருந்து என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்.