நண்பன் ஒருவன் வந்த பிறகு படம் பார்த்த சிவகார்த்திகேயன்! என்ன சொல்லிருக்காரு தெரியுமா?

Sivakarthikeyan

சென்னை : இளைஞர்களை கவரும் அளவுக்கு ஒரு நல்ல படம் வெளிவந்துவிட்டது என்றாலே அதனை அவர்கள் கொண்டாடாமல் இருக்கவே மாட்டார்கள் என்றே சொல்லலாம். அப்படி தான் தற்போது ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’ திரைப்படத்தினை கொண்டாடி வருகிறார்கள். அறிமுக இயக்குனர் ஆனந்த் ராம் என்பவர் இயக்கி முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படம் கடந்த ஆகஸ்ட் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

நட்பை மையாக வைத்து எடுக்கப்பட்டு இருந்த இந்த திரைப்படத்தில்   லீலா, குமரவேல், விஷாலினி, ஆனந்த், பவானி ஸ்ரீ, ஆர்ஜே விஜய், இர்ஃபான், தேவ், கலக்கப்போவது யாரு பாலா, மோனிகா, ஆர்ஜே ஆனந்தி, சபரிஷ், குகன், தர்மா, வினோத் பூவேந்தன், மதன் கௌரி, ஜெரோம் ரெமிகாஸ், பிரவீன், சாய் வெங்கடேஷ்
தங்கதுரை உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

இந்த திரைப்படத்தினை ஒயிட் ஃபெதர் ஸ்டுடியோவுடன் இணைந்து மசாலா பாப்கார்ன் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர்  AH காஷிஃப் இசையமைத்துள்ளார். படத்தினை வெங்கட் பிரபு வழங்கி இருக்கிறார். படத்தினை பார்த்துவிட்டு மக்கள் பாராட்டுவதோடு சினிமா பிரபலங்களும் பாராட்டி வருகிறார்கள்.

அந்த வகையில், படத்தினை பார்த்துவிட்டு சிவகார்த்திகேயன் பாராட்டி இருக்கிறார். சென்னையில் படத்தினை பார்த்துவிட்டு அவர் கூறியதாவது ” நண்பன் ஒருவன் படம் மிகவும் நன்றாக இருக்கிறது. அற்புதமான நண்பர்கள் சேர்ந்தால் வெற்றிகள் குவியும் என்ற வரி என்னுடைய வாழ்க்கையிலும், என்னுடைய நண்பர்கள் வாழ்க்கையிலும் மிகப்பெரிய ஒரு உதாரணமாக இருக்கிறது. அந்த வரிகள் தான் இந்த நண்பன் ஒருவன் வந்த பிறகு படம்.

இந்த படத்தில் ஒரு 60 காட்சிகள் இருக்கிறது என்றால் கண்டிப்பாக ஒரு 30, 40 காட்சிகள் நம்மளுடைய வாழ்க்கையில் நடந்த விஷயங்களை நினைவு கொண்டு வரும். இன்றய காலத்தில் இருக்கும் இளைஞர்கள் எதாவது ஒரு குறிக்கோளை அடையவேண்டும் என்று நினைத்துக்கொண்டு இருப்பவர்கள் என அனைத்தையும் படத்தில் வைத்து இருக்கிறார்கள்.

படத்தினை இயக்கி நடித்துள்ள ஆனந்த் ராம் ரெமோ படத்தில் சிறிய காட்சியில் நடித்தவர். அங்கு இருந்து வளர்ந்து இப்படி ஒரு நல்ல படத்தை எடுத்து மிகவும் மகிழ்ச்சி. அவருக்கு நான் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். கண்டிப்பாக நண்பன் ஒருவன் வந்த பிறகு படத்தை வந்து திரையரங்கில் பாருங்கள்” எனவும் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live today update
Nainar Nagendran and cm
mumbai indians rohit sharma
PutraHeight Malaysia Fire
street dogs
csk Ashwani Kumar
goods trains collide in Jharkhand