‘தங்கத்துக்கு போராடிய தங்கமகன்’..! இறுதியில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார் ‘நீரஜ் சோப்ரா’..!

Neeraj Chopra

பாரிஸ் : இந்த ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டியில் ஒட்டுமொத்த இந்தியாவும் எதிர்ப்பார்த்த ஒரு போட்டி தான் எட்டி எறிதல், அதற்கு மிக முக்கிய காரணம் நீரஜ் சோப்ரா ஏனென்றால் கடந்த 2020ல் நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக்ஸ் தொடரில் இந்திய சார்பாக விளையாடிய இவர் 87.58 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து தங்கப் பதக்கத்தை வென்று அசத்தினார்.

இதனால் அவர் தடகள போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார். மேலும், ஒட்டுமொத்த இந்தியர்களாலும் ‘தங்கமகன்’ என்று அழைக்கப்பட்டார். இதனை தொடர்ந்து இந்த பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடரில் ஈட்டி எறிதல் போட்டிக்கான தகுதி சுற்று நடைபெற்றது.

அதில் நீரஜ் சோப்ரா 89.34 மீட்டர் எறிந்து இறுதி போட்டிக்கு தகுதி பெற்றிருந்தார்.  அதனை தொடர்ந்து இன்று ஈட்டி எறிதலில் இறுதி போட்டியானது நடைபெற்றது. இதில் ஒரு வீரருக்கு 6 வாய்ப்புகள் கொடுக்கப்படும்.

அதன்படி நீரஜ் சோப்ரா முதல் வாய்ப்பில் கோட்டை தாண்டியதால் அதை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. அதனை தொடர்ந்து அவர் வீசிய 2-வது த்ரோவில் 89.45 மீட்டர் எறிந்து 2-ஆம் இடம் பிடித்தார். இவருக்கு முன் பாகிஸ்தான் வீரரான ஹர்சத் நதீம் 92.97 மீட்டர் எறிந்து ஒலிம்பிக் தொடரின் வரலாற்று த்ரோவை பதிவு செய்தார்.

அதனை தொடர்ந்து அடுத்த கட்டமாக அவர் தொடர்ந்து எறிந்த 3 த்ரோவிலும் கோட்டை தாண்டினார். மேலும், கடைசியாக அவர் எறிந்த த்ரோவிலும் அவர் சரியாக எறியவில்லை. இதன் காரணமாக அவர் 2-ஆம் இடத்தில் நீடித்தார்.

இதன் மூலம் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தி இருக்கிறார். நடைபெற்று வரும் இந்த ஒலிம்பிக் தொடரில் இந்தியா வென்ற முதல் வெள்ளிப் பதக்கம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்திய அணி இந்த பாரிஸ் ஒலிம்பிக்கில் மொத்தம் 5 பதக்கங்களை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், சுஷீல் குமார், பிவி சிந்துவுக்கு பிறகு தனி நபர் பிரிவில் 3-வது தடகள வீரராக தொடர்ந்து ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார் நீரஜ் சோப்ரா. பல காயங்கள் கடந்த வருடம் இவர் சந்தித்து அதிலிருந்து மீண்டு வந்து தற்போது வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.

மேலும், தங்கம் கிடைக்கும் என இந்தியா மக்கள் எதிர்ப்பார்த்த நிலையில் தற்போது வெள்ளிப் பதக்கம் கிடைத்தால் சற்று வருத்தத்தில் இருந்தாலும் வெள்ளிப் பதக்கம் வென்றதன் காரணமாக அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்