குழந்தைகளுக்குப் பிடித்த சாக்லேட் வீட்டிலேயே செய்வது எப்படி?
Chocolate -வீட்டிலேயே சுலபமான முறையில் சாக்லேட் செய்வது எப்படி என இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்;
- சர்க்கரை= ஒரு கப்
- பால் பவுடர்= ஒரு கப்
- கொக்கோ பவுடர்= கால் கப்
- பட்டர்= ஒரு ஸ்பூன்
- முந்திரி பாதாம்= தேவையான அளவு
செய்முறை;
ஒரு பாத்திரத்தில் சர்க்கரை சேர்த்து அதில் கால் கப் அளவு தண்ணீரை ஊற்றி மிதமான தீயில் வைத்துக்கொள்ளவும் .சர்க்கரை நன்கு கரைந்து ஒரு கம்பி பதம் வந்த பிறகு கொக்கோ பவுடரை சலித்து அதில் சேர்த்துக் கொள்ளவும். அதனுடன் பால் பவுடரையும் சேர்த்து கலந்து விடவும் .இப்போது கட்டிகள் இல்லாமல் கலந்த பிறகு ஒரு ஸ்பூன் பட்டர் மற்றும் நட்ஸ் வகைகளை சிறிதாக நறுக்கி வறுத்து அதனுடன் சேர்த்து நன்கு கிளறி இறக்க வேண்டும்.
இப்போது இதனை ஒரு நெய் தடவிய பாத்திரத்தில் மாற்றி ஆறவைத்து ஃப்ரீசரில் வைத்து விட வேண்டும் .30 நிமிடம் கழித்து எடுத்தால் கட்டியாக இருக்கும். இப்போது ஒரு கத்தியில் நெய் தடவி உங்களுக்கு பிடித்த வடிவத்தில் நறுக்கி சாப்பிடலாம். தேவைப்படும்போது எடுத்துக்கொண்டு பிறகு இதை பிரிட்ஜில் வைத்துவிட வேண்டும் .மூன்று மாதங்கள் வரை கெடாமல் இருக்கும்.இதுபோல் குழந்தைகளுக்கு வீட்டிலேயே சுகாதாரமான முறையில் செய்து கொடுத்து அசத்துங்கள் .