கருட பஞ்சமி 2024.. விஷ சந்துக்கள் மற்றும் விபத்தில் இருந்து காக்கும் கருட பஞ்சமி வழிபாடு..!

garudan

Devotion-கருட பஞ்சமியின் சிறப்புகள் மற்றும் அதன் வரலாறு, வழிபாட்டிற்கு உரிய நேரம் மற்றும் தேதியை இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

ஆடி மாதம் அவசியம் அனுஷ்டிக்க வேண்டிய விரதங்களில் கருட பஞ்சமியும் ஒன்று .ஆடி மாதம் வரும் வளர்பிறை பஞ்சமியே  கருட பஞ்சமி ஆகும். கருட பஞ்சமி அன்று கருட பகவானையும் பெருமாளையும் வழிபடுவது மிக சிறப்பு வாய்ந்ததாக புராணங்கள் கூறுகிறது. கருடன் சாதாரண பறவை மட்டுமல்ல அது மகாவிஷ்ணுவின் வாகனமாக உள்ளது.

கருடனின் பார்வை நம் மீது பட்டால் நம்முடைய பாதி பாவங்கள் விலகிப் போய்விடும் என புராணங்கள் கூறுகிறது .அந்த அளவுக்கு சக்திகளை மகாவிஷ்ணு கருடனுக்கு கொடுத்துள்ளார். பெருமாளுக்கு எத்தனையோ வாகனங்கள் இருந்தாலும் கருட சேவை தான் மிக விசேஷமானது. அதனால்தான் கருடனுக்கு ஆழ்வார் என்ற சிறப்பு பெயரும் சேர்த்து கருடாழ்வார் என்றும் அழைக்கப்படுகிறார்.

கருட பஞ்சமியின் வரலாறு;

பிரம்மதேவனின் மகனான கஷ்யப்பரின் வாரிசுகள் தான் நாகங்களும் கருடனும் கஷ்யப்பரின் மனைவிகளான கத்ரு என்பவர் நாகங்களுக்கு தாயாகவும், வினதா என்பவர்  அருணன் மற்றும் கருடனுக்கு தாயாகவும் உள்ளனர். ஒருமுறை கத்ருவிற்கும்  வினதாவிற்கும் ஒரு போட்டி நடந்தது. இதில் யார் வெற்றி பெறுகிறாரோ அவருக்கு தோல்வி அடைந்தவர் சேவை செய்ய வேண்டும் என்று ஒப்பந்தம் போட்டுக் கொண்டனர்.

அதன்படி போட்டியில்  கருடனின் தாய் வினதா தோல்வியுற்றதால் கத்ருவிற்கும்  நாகங்களுக்கும் கருடன் ,அருணன் ,வினதா மூவரும் அடிமையானார். இந்த அடிமைத்தனத்திலிருந்து மீள  கருடன் நினைத்துக் கொண்டிருந்தார். அப்போது நாகங்களின் தாயான கத்ரு  தேவேந்திரிடம் இருந்து அமிர்த கலசத்தை கொண்டு வந்து கொடுத்தால் உங்களை விடுவிக்கிறேன் என்று கூறுகிறார்.

இதைக் கேட்ட கருடன் மகிழ்ச்சி அடைந்து தேவலோகத்திற்கு செல்கிறார் அங்கு கருடனுக்கும் தேவர்களுக்கும் கடுமையான போர் நடந்தது அதில் கருடன் வெற்றி பெற்று அமிர்த கலசத்தை கத்ருவிடம் கொடுக்கிறார். இதனால் அவர்கள் அடிமைத்தனத்திலிருந்து மீட்கப்பட்டனர். இதையறைந்த விஷ்ணு பகவான் தாய்க்காக செய்த செயலை நினைத்து தன்னுடைய வாகனமாக ஏற்றுக்கொண்டார். இவ்வளவு சிறப்புமிக்க கருட பகவானின் பிறந்த தினம் தான் கருட பஞ்சமி ஆக அழைக்கப்படுகிறது.

பலன்கள்

பொதுவாக ராகு கேது தோஷங்கள் உள்ளவர்களின் கண்களுக்கு தான் நாகங்கள் தென்படும் என கூறுவார்கள். கார்க்கோடகன் என்ற நாகத்தை அடக்கி பிடித்து நாகங்களை ஆபரணமாக கருடன் வைத்துக் கொண்டதால் ராகு கேது தோஷங்கள் உள்ளவர்கள் கருட பஞ்சமி வழிபாடை மேற்கொள்வதன் மூலம் தோஷங்கள் அகலும் என நம்பப்படுகிறது.

மேலும் நாக தோஷம் தீவிரமாக இருப்பவர்கள் நாக சதுர்த்தி அன்று விரதம் இருந்து கருட பஞ்சமி அன்று விரதத்தை முடிக்க வேண்டும். இதன் மூலம் அனைத்து வித சர்ப்ப தோஷங்களும் பரிபூரணமாக விலகும் என்பது ஐதீகமாக உள்ளது.

மேலும் கருட பஞ்சமியை வழிபடுவதன் மூலம் விஷ சந்துக்களால் ஏற்படும் தீங்குகளில் இருந்தும், வாகன விபத்துகளில் இருந்தும் கருட பகவான் பாதுகாப்பு கொடுப்பார் என்றும் நம்பப்படுகிறது.

கருட பஞ்சமி 2024 இல் எப்போது?

இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் எட்டாம் தேதி வியாழக்கிழமை இரவு 11; 48 மணிக்கு தொடங்கி ஆகஸ்ட் 10 ஆம் தேதி  1:44 மணிக்கு முடிவடைகிறது. ஆனால் கருட பஞ்சமி ஆகஸ்ட் 9 ம்  தேதி வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது.

இந்த கருட பஞ்சமி அன்று அனைத்து பெருமாள் கோவில்களிலும் கருட பகவானுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். அன்றைய  தினத்தில் பெருமாள் கோவிலுக்கு சென்று கருட பகவானுக்கு துளசி மாலை சாட்டி அர்ச்சனையுடன் கற்கண்டை நெய்வேத்தியமாக வைத்து அதை அனைவருக்கும் தானமாக கொடுக்க வேண்டும். மேலும் சிறப்பு வழிபாடாக உங்கள் வாகனங்களின் சாவியை இறைவன் காலடியில் சமர்ப்பித்து பூஜை செய்து வாங்கிக் கொள்ளலாம்.

ஆகவே கருட பகவானின் பார்வை நம் மீது பட்டு நாம் பாவங்களும் சர்ப்ப தோஷங்களும் நீங்கவும்,  விஷச் சந்துக்களிடமிருந்து நம்மை பாதுகாக்கவும்  நம்பிக்கையுடன் கருட பஞ்சமியை வழிபடுவோம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்