ஷேக் ஹசீனாவின் 2வது இந்திய அடைக்கலம்.! 1975 முதல் சம்பவம் தெரியுமா.?

Sheik Hasina Present and Old Photos

வங்கதேசம் : இடஒதுக்கீடு , மாணவர்கள் போராட்டம் நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்புகளை தொடர்ந்து வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்து இந்தியாவில் தற்காலிமாக தஞ்சம் அடைந்தது வரையில் அனைத்தும் தலைப்பு செய்திகளாக நமக்கு தெரிந்த கதையாகி உள்ளது.

இந்தியாவில் தஞ்சம் :

ஷேக் ஹசீனாவுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவு அளிக்குமா என்பது சந்தேகமே. ஷேக் ஹசீனா அடுத்ததாக இங்கிலாந்து செல்ல உள்ளதாக கூறப்பட்ட நிலையில் ,  அந்நாட்டு சார்பாக வெளியான தகவலின் படி, ‘ பாதுகாப்பு காரணங்களுக்காக ஒரு தலைவர் எந்த நாட்டில் முதன் முதலாக தஞ்சம் அடைகிறாரோ அதுவே அவருக்கு பாதுகாப்பான நாடு. எனவே அவர் இந்தியாவில் இருப்பதே நல்லது என்பது போல கருத்து கூறியுள்ளது.

இந்தியாவின் நிலைப்பாடு :

ஆனால், வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மக்கள் இருப்பதால் அது இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், ஷேக் ஹசீனா இந்தியாவில் இருப்பது வங்கதேச எல்லையில் பதற்றத்தை உண்டு செய்யும் என்றும் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. அதனால் நீண்ட நாட்கள் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்து இருக்க முடியாது. இதனால் ,  பின்லாந்து அல்லது ஐக்கிய அரபு நாடுகளுக்கு செல்ல ஷேக் ஹசீனா திட்டமிட்டுள்ளார்.

இது முதல்முறையல்ல…

ஷேக் ஹசீனா பாதுகாப்பு கருதி இந்தியாவில் தஞ்சம் புகுந்து இருப்பது இது முதல் முறையல்ல. 1975ஆம் ஆண்டே இதே போல பாதுகாப்பு வேண்டி இந்தியாவில் தஞ்சம் புகுந்து இருந்தார் ஷேக் ஹசீனா என்பது குறிப்பிடத்தக்கது.

ஷேக் முஜ்புர் ரஹ்மான் :

1975 சம்பவம் பற்றி குறிப்பிட வேண்டும் என்றால் ,  ஷேக் ஹசீனாவின் தந்தையும் ,  வங்கதேசத்தில் தேசப்பிதா என்றழைக்கப்டும் ஷேக் முஜ்புர் ரஹ்மான் பற்றியும் கூற வேண்டும். முதலில் இந்திய விடுதலை போராட்டத்திலும் பங்கேற்ற அவர் , பின்னர் இந்தியாவில் இருந்த பிரிந்து சென்ற பாகிஸ்தானில் கிழக்கு பாகிஸ்தானில் (தற்போதைய வங்கதேசம்) முக்கிய தலைவராக உருவெடுத்தார்.

வங்கதேச தேசப்பிதா :

1970 தேர்தலில் ஷேக் முஜ்புர் ரஹ்மான் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றதை அடுத்து, பாகிஸ்தானில் இருந்து பிரிந்து வங்கதேசம் எனும் தனி நாடு கோரிக்கையை முன்னிறுத்தினார். அதற்கு அப்போதைய இந்திராகாந்தி தலைமையிலான இந்திய அரசு ஆதரவு அளித்து  இந்திய ராணுவ உதவியுடன், பாகிஸ்தானை எதிர்த்து போரிட்டு வெற்றி பெற்று பின்னர் 1971இல் வங்கதேசம் தனி நாடானது. வங்கதேச தேசப்பிதாவாக ஷேக் முஜ்புர் ரஹ்மான் உருவெடுத்தார். அவாமி லீக் கட்சி சார்பாக  ஷேக் முஜ்புர் ரஹ்மான் சுதந்திர வங்கதேசத்தின்  முதல் பிரதமரானார்.

1975இல்…

ஷேக் முஜ்புர் ரஹ்மானின் மூத்த பிள்ளை தான் ஷேக் ஹசீனா. இவர், 1975 காலகட்டத்தில் பிரிட்டனில் தனது கணவர் ,  குழந்தைகளுடன் வசித்து வந்தார். 1975 ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று வங்கதேச தேச பிதாவாக இருந்த ஷேக் முஜ்புர் ரஹ்மான் உள்நாட்டு ராணுவத்தாலேயே கொல்லப்பட்டார். மேலும் ஷேக் ஹசீனா தவிர அவரது குடும்பத்தினர் அனைவரும் கொல்லப்பட்டனர்.

6 ஆண்டுகள் தஞ்சம் :

அப்போது வங்கதேசத்தில் நிலைமை மோசமாகி இருந்ததை உணர்ந்த ஷேக் ஹசீனா ,  இந்தியாவிடம் உதவி கேட்டார். உடனடியாக இந்திய அரசும் உதவியது. 1975ல் பிரிட்டனில் இருந்து நேரடியாக டெல்லிக்கு குடும்பத்துடன் வந்திறங்கிய ஷேக் ஹசீனா, டெல்லி பண்டாரா பகுதியில் 1981 வரையில் சுமார் 6 ஆண்டுகள் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் புகுந்து இருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

நீண்ட கால பிரதமர் :

அதன் பிறகு, பல்வேறு ஆட்சி மாற்றங்களுக்கு பிறகு 1996 முதல் 2001 வரையில் வங்கதேச பிரதமராக உருவெடுத்தார் ஷேக் ஹசீனா. பின்னர், 2009இல் மீண்டும் பிரதாமாக வெற்றி பெற்ற ஷேக் ஹசீனா கடந்த ஆகஸ்ட் 5, 2024 வரையில் சுமார் 15 ஆண்டுகள் வங்கதேச பிரதமராக பொறுப்பில் இருந்தார் ஷேக் ஹசீனா.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்