இனி போலி செய்திகளுக்கு இடமில்லை.. தமிழக அரசின் அசத்தல் நடவடிக்கை.!

TN Fact Check

சென்னை : அரசு அல்லது மற்ற ஏனைய செய்திகள் பற்றி சில தவறான தகவல்கள் பல்வேறு சமயங்களில் சமூக வலைத்தளத்தில் தவறாக சித்தரிக்கப்பட்டு பரப்பப்பட்டு விடுகிறது. அவ்வாறு பரப்பப்படும் செய்திகள் பற்றிய உண்மைத்தன்மையை கண்டறிய தமிழக அரசு ஓர் அமைப்பை உருவாகியுள்ளது.

அது பற்றிய செய்தி குறிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில், தமிழ்நாடு அரசின் சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை மற்றும் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் கீழ் இயங்கும் தகவல் சரிபார்ப்பகம் தினமும் சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வெறுப்பு
பிரச்சாரங்கள் மற்றும் போலி செய்திகளைக் கண்டறிந்து மக்களுக்கு உண்மையான தகவல்களைத் ஆதாரங்களோடு பதிவிட்டு வருகிறது.

எனவே, சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளின் உண்மைத் தன்மையை அறிந்துகொள்ள உதவும்படி ஒரு QR கோடு (லிங்க்) கொடுக்கப்பட்டுள்ளது. அதனை ஸ்கேன் செய்து அதில் உள்ள சமூக வலைதள பக்கத்தை பின்பற்றி அந்த சமூக வலைதள பக்கத்தில் பயனர்கள் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும்

TN Fact Check
TN Fact Check [Image source : TN DIPR]
அந்த TN Fact Check பக்கத்தில் , தமிழகத்தில் சமூக வலைத்தளத்தில் பரவும் போலி செய்திகள் பற்றியும், அதன் உண்மை தன்மை பற்றியும் அவ்வப்போது செய்திகள் வெளியாகி வருகின்றன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்