தூங்கும் போது யாரோ அமுக்குவது போல் உள்ளதா? காரணம் என்ன தெரியுமா?

sleep paralysis

Sleeping –அமுக்குவான் பேய் என்பது என்ன இது உண்மையா என்றும் அறிவியல் கூறும் காரணங்கள் பற்றியும் இப்பதிவில் பார்க்கலாம்..

தூக்க முடக்கம் என்றால் என்ன ?

ஒரு சிலருக்கு தூங்கும் போது யாரோ நெஞ்சில் அமர்ந்து இருப்பது போலவும் தன்னை அமுக்குவது போலவும் கண்களை திறக்க முடியாதவாறு இருக்கும். இந்த உணர்வை பலரும் அனுபவித்திருப்பீர்கள் இதைத்தான் அமுக்குவான் பேய் என்று சிலர் கூறுவது உண்டு. ஆனால் இதற்குப் பெயர் தூக்கம் முடக்கம் என்றும் ஆங்கில மருத்துவர்கள் இதனை ஸ்லீப் பெராலிசிஸ் என்றும் கூறுகின்றனர்.

தூக்கத்தின் நிலைகள் ;

தூக்கத்தின் நிலை நான்காக உள்ளது. இந்த நான்கு நிலையும் ஐந்து முறை சுழற்சி ஆகிக்கொண்டே இருக்கும். முதல் நிலையில் தூங்கும் போது மற்றவர்கள்  பேசுவது அனைத்தும் நமக்கு கேட்கும். இரண்டாம் நிலை சற்று ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்வோம். மூன்றாம் நிலையானது நல்ல ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்று கனவுகள் இல்லாத உறக்கமாக இருக்கும். இந்த நிலையில் நம் தசைகளை அசைக்க முடியாது நம் மூளையானது அமைதியாக உறங்கக்கூடிய நேரம் இதுதான்.

இந்த நிலையில் இருந்து  நான்காம் நிலைக்கு செல்லும்போது நம் மனம் மட்டும் விழித்துக் கொண்டு கனவு நிலைக்குச் செல்லும். இதற்குப் பிறகுதான் நான்காம் நிலை இதன் பெயர் ராம் ஸ்டேஜ் என்றும் கூறுவார்கள் . நான்காம் நிலைக்குப் பிறகு தான் நமது கண்கள் மட்டும் அசையும். இதுபோல் நாம் ஏழு மணி நேர தூக்கத்தில் ஐந்து முறை சுழற்சி ஆகும். இதுவே தூக்கத்தின் இயல்பு நிலையாகும் .இதில்  ஏற்படும் சில மாற்றங்களால் தான் அதாவது மூன்றிலிருந்து நான்காம் நிலைக்கு செல்லும் நிலையில் மாறுபாடுகள் ஏற்படும்.

மூன்றாம் நிலையிலிருந்து நான்காம் நிலைக்கு செல்லும்போது கனவு நிலை ஏற்படும். இந்த நேரத்தில் நம் மனது விழித்துக் கொள்ளும் இது ஒரு குழப்பமான மனநிலையை ஏற்படுத்துகிறது. இந்த சமயத்தில் கனவு நிலைக்கு செல்வதற்கு முன்பு உடலை அசைக்க முடியாதவாறு ஏற்படும். ஏனென்றால் இந்த சமயத்தில் மூச்சு விடுதல் என்பது சற்று மெதுவாக இருக்கும் இதைத்தான் நாம் மனது ஏதோ அமுக்குவது போல் நினைத்து பயம் படபடப்பை ஏற்படுத்துகிறது. இந்த பயம் மேலும் அதிகரிக்கும் போது தான் திடக்கென்று விழிப்பை ஏற்படுத்திகிறது.

இதனை சரி செய்ய முடியுமா?

இந்தப் பிரச்சனை ஒரு உளவியல் சார்ந்த பிரச்சனை தான். சுலபமாக சரி செய்து விட முடியும் என மருத்துவர்கள் கூறுகின்றனர் . இந்த தூக்கத்தின் நிலையானது சில வினாடிகள் மட்டுமே இருக்கும். ஆனால் நமக்கு ஏதோ பல வருடங்கள் ஆனது போல் தெரியும்.

பயத்தை குறைத்துக் கொண்டாலே போதும் மேலும் இந்த சமயத்தில் ஆழ்ந்த மூச்சை இழுத்து விடுவதன் மூலமும் சாதாரண நிலைக்கு வரலாம். அது மட்டுமல்லாமல் கழுத்து, மார்பு போன்றவற்றை இந்த நேரத்தில் அசைக்க முடியாத நிலை இருக்கும் இதனால்தான் யாரோ அமர்ந்திருப்பது போல் உணர்வு ஏற்படும் .அதனால் மெதுவாக கை மற்றும் கால் விரல்களை அசைக்க வேண்டும்.

பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நாம் இயல்பு நிலைக்கு திரும்பி விடுவோம். மேலும் தூங்கும் போது மல்லாந்து படுப்பதை தவிர்க்கவும். தூங்குவதற்கு முன் உங்களை பயபடுத்தும் காரியங்களில் ஈடுபடுவது, பார்ப்பது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். தூங்கும் நேரத்தை ஒரே மாதிரி அமைத்துக் கொள்வது மிக அவசியம்.

ஆகவே அமுக்குவான் பேய் என்பது உண்மையா என்று உங்களுக்கு இப்போது புரிந்திருக்கும்.அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை . நம் பயத்தால் ஏற்படும் இந்த உணர்வை தவிர்த்து நல்ல தூக்கத்தை பெற யோகா உடற்பயிற்சி போன்றவற்றை கடைபிடிக்கலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்