மணக்க மணக்க இட்லி பொடி செய்யும் முறை..!

idli podi

இட்லி பொடி -கமகமவென வாசனையுடன் இட்லி பொடி செய்வதன் ரகசியத்தை இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்;

  • அரிசி= கால் கப்
  • உளுந்து= 200 கிராம்
  • கடலைப்பருப்பு =100 கிராம்
  • பூண்டு= கால் கப்
  • கருவேப்பிலை= ஒரு கைப்பிடி
  • கட்டி பெருங்காயம்= 10 கிராம்
  • காஷ்மீர் மிளகாய்= 10
  • காய்ந்த மிளகாய்= 75 கிராம்
  • கல் உப்பு= இரண்டு ஸ்பூன்.

spices (6)

செய்முறை;

முதலில் ஒரு பாத்திரத்தில்  அரிசியை பொன்னிறமாக வறுத்தெடுக்கவும் .பிறகு உளுந்து கடலைப்பருப்பு, கல் உப்பு ,தோலுடன் கூடிய பூண்டு ஆகியவற்றையும் தனித்தனியாக வறுத்து எடுத்துக் கொள்ளவும், ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கருவேப்பிலையும் வறுத்தெடுத்துக் கொள்ளவும். பிறகு அரை ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பெருங்காயத்தையும் வறுக்கவும். இப்போது இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி மிளகாயை இரண்டாக்கி வறுத்தெடுத்துக் கொள்ளவும். பிறகு இவற்றை நன்றாக ஆற வைத்துக் கொள்ளவும்.

idli podi (1)

ஆறிய  பிறகு மிக்ஸியில் மிளகாய் ,கல் உப்பு, பெருங்காயம் இவற்றை ஒரு நிமிடம் அரைத்துக் கொள்ளவும் .அதன் பிறகு கடலைப்பருப்பு, உளுந்து ,அரிசி,  சேர்த்து இரண்டு சுற்று அரைத்து பிறகு கருவேப்பிலை மற்றும் பூண்டை சேர்த்து இட்லி பொடி பக்குவத்திற்கு அரைத்துக் கொள்ளவும். இப்போது கம கம வென வீடு மணக்கும் இட்லி பொடி தயார். இதை சூடான இட்லியுடன் தேவையான அளவு நம் தயாரித்துள்ள இட்லி பொடியை சேர்த்து அதனுடன் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிட்டால் அமர்க்களமாக இருக்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

donald trump tariffs
Yashasvi Jaiswal
PM Modi office
US President Donald trump
maruthamalai - murugan vel
tn rain
Kane Williamson