இந்த படத்தில் எதை பார்த்தீர்கள்.? உங்களின் மூளை வேகமாக செயல்படுகிறதா.?
முயல் – வாத்து : ஒரு புகைப்படத்தையோ அல்லது ஓவியர் தனது கற்பனையில் வரைந்த ஓவியத்தையோ ஒவ்வொருவரும் பார்க்கும் போது அவர்களின் வாழ்வின் அனுபவங்கள், உளவியல் திறன் கொண்டு ஒவ்வொரு விதமாக புரிதல் இருக்கும் என பல்வேறு ஆய்வு அறிக்கைகள் கூறுகிறது.
எண் எழுத்துக்களில் 6 என ஒருவர் எழுதி பார்த்தால் அதனை எதிரே இருப்பவர் பார்க்கையில் அவரின் கண்ணோட்டத்தில் அந்த எண் 9 ஆக காட்சிபடுத்தப்படும். இருவரது கண்ணோட்டமும் சரி தான். அதனை யார் எங்கிருந்து எந்த சூழலில் அதனை பார்க்கிறார்கள் என்பதை பொறுத்து ஓவியங்களின் தன்மை ஒவ்வொருவருவருக்கும் மாறுபடும்.
இதனை குறிப்பிடும் வகையில், 1899ஆம் ஆண்டு அமெரிக்க உளவியலாளர் ஜோசப் ஜாஸ்ட்ரோவால் என்பவர் வாத்து முயல் முகங்கள் அடங்கிய புகைப்படத்தை வரைந்து அதனை தனது ஆய்வுக்கு பயன்படுத்தினார். அதில் குறிப்பிடப்படும் கருத்து என்பது ஒவ்வொருவரும் பார்க்கும் கண்ணோட்டத்தின் மூலம் அவர்கள் பார்ப்பது அவர்களின் மனதின் செயல்பாடு ஆகும் என குறிப்பிடுகிறார்.
மேற்குறிப்பிட்ட புகைப்படத்தில் சிலர் முயலை பார்ப்பார்கள், சிலர் வாத்தை பார்ப்பார்கள். ஆனால், சிலரே இரண்டையும் ஒரே நேரத்தில் பார்ப்பார்கள்.ஆனால், இரண்டையும் கண்டறிந்து அதனை எவ்வளவு வேகமாக உணர்ந்து கொள்கிறீர்கள் என்பதை பொறுத்து உங்கள் மூளை எவ்வளவு வேகமாக வேலை செய்கிறது என்பதை கண்டறியலாம் என அமெரிக்க உளவியலாளர் குறிப்பிடுகிறார். இந்த புகைப்படம் பல்வேறு காலகட்டங்களில் உளவியல் ரீதியில் பல்வேறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.