தமிழக அரசுக்கு ஒருவாரம் தான் கெடு.. லிஸ்ட் போட்ட அண்ணாமலை.!

BJP State President Annamalai

ஈரோடு : பவானி சாகர் அணையில் இருந்து வெளியேறும் உபரி நீரை கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள வறட்சி உள்ள நீர் நிலைகளுக்கு செல்லும் வகையில், அங்குள்ள விவசாயிகள் பயன்பெற அறிமுகம் செய்யப்பட்ட திட்டமே அத்திக்கடவு – அவிநாசி திட்டம்.

தொடர் உண்ணாவிரத போராட்டம் :

இந்த திட்டத்தை விரைவில் செய்லபடுத்தி விடுவோம் என அவ்வப்போது தமிழகஅமைச்சர்கள் கூறி வருவதாகவும், ஆனால் இன்னும் அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை அரசு செயல்படுத்தவில்லை என்று கூறியும் பாஜக மணிலா தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக உண்ணாவிர போராட்டம் நடைபெறும் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இன்று ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அண்ணாமலை, உண்ணாவிர போராட்டம் குறித்து பேசினார். அதில், அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை உடனடியாக தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி முதல் பாஜக விவசாய அணி தலைவர் ஜி.கே.நாகராஜன் தொடர் உண்ணாவிரத போராட்டம் மேற்கொள்ள உள்ளார். அப்போது பாஜக தலைவர்களும் அந்த போராட்டத்தில் கலந்து கொள்வோம்.

அமைச்சர்களின் விளக்கங்கள்….

இந்த தொடர் உண்ணாவிர போராட்ட முடிவு எதற்காக என்றால், தமிழக முதல்வரும், தமிழக அமைச்சர்களும் தொடர்ச்சியாக அத்திக்கடவு அவிநாசி திட்டம் குறித்து கூறி வருகின்றனர். கடந்த மார்ச் 24. 2022இல் இத்திட்டம் 2022 ஜூன் மாதம் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என கூறினர். அடுத்து அமைச்சர் துரைமுருகன் 7 ஆகஸ்ட் 2022இல், 2022இல் டிசம்பர் மாதம் செயல்பாட்டிற்கு வரும் என கூறினார்

அடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின், 25.08.2022இல், 2022 டிசம்பரில் இத்திட்டம் பயன்பாட்டிற்கு வரும் என கூறினார். அடுத்து அமைச்சர் முத்துசாமி, 20 ஜனவரி 2023இல், 97 சதவிதம் பணிகள் முடிந்தது. 8 மார்ச் 2023இல் செயல்பாட்டிற்கு வரும் என கூறினார். அடுத்து 15 நாளில் சோதனை ஓட்டம் என்றும் கூறினார்.

அடுத்து 15 ஏப்ரல் 2023இல் திமுக எம்பி ஆர்.ராசா கூறுகையில், 2023 ஆகஸ்ட் மாதம் அமலுக்கு வரும் என கூறினார் . அடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் 27 ஆகஸ்ட் 2023இல் கூறுகையில் சில மாதங்களில் இத்திட்டம் அமலுக்கு வரும் என கூறினார். அடுத்து, அமைச்சர் முத்துசாமி கடந்த அக்டோபர் 2023இல் 99 சதவீத பணிகள் முடிவடைந்தது என கூறினார்.

அடுத்து, 9 அக்டோபர் 2023இல் அமைச்சர் துரைமுருகன் காலிங்கராயர் அணையில் நீர் நிரப்பி சோதனை செய்யப்படும் என கூறினார். அடுத்து அமைச்சர் துரைமுருகன் 2023 டிசம்பர் மாதம் எல்லா பணிகளும் நிறைவுற்றதாக கூறினார். 4 ஜனவரி 2024இல் நாங்கள் போராட்டம் அறிவித்த பின்னர் அமைச்சர் முத்துசாமி இன்னும் ஒரு வாரத்தில் திட்டம் செயல்படுத்த படும் என கூறினார்.  இவ்வாறு அமைச்சர்கள் தமிழக முதல்வர் கடந்த 39 மாதங்களாக கூறி வருகின்றனர்.

பாஜகவின் கோரிக்கைகள் :

எங்கள் முதல் கோரிக்கை அத்திக்கடவு – அவிநாசி திட்டம் உடனடியாக செயல்படுத்த வேண்டும். காவிரியில் அதிகளவு நீர் வருகிறது. ஆதலால் உபரி நீர் பவானி சாகர் அணைக்கு வந்துவிட்டது. சோதனை ஓட்டம் என்று சொல்லி கொண்டு இருக்க வேண்டாம்.

அடுத்து, விவசாயிகள் நிலத்தில் பதித்துள்ள தண்ணீர் பைப்புகளுக்கு முன்னதாக அறிவிக்கப்பட்ட நிதியை வழங்க வேண்டும். இன்னும் ஒருவாரம் தான் கெடு. அதற்குள் விவசாயிகள் கணக்கில் வரவு வைக்க வேண்டும். ஏற்கனவே, இந்த திட்டத்திற்கு 1,652 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, அந்த நிதி கஜானாவில் உள்ளது. அரசு கையெழுத்திட்டால் விவசாயிகளுக்கு பணம் வந்துவிடும்.

அடுத்து, மத்திய அரசு கடந்த 2021இல் அறிவித்த அணை பாதுகாப்பு சட்டத்தை தமிழக அரசு உடனைடியாக செயல்படுத்தி , தமிழகத்தில் உள்ள அணைகளை பாதுகாக்க வேண்டும். ஏற்கனவே பவானிசாகர், திருமூர்த்தி, அமராவதி , ஆழியாறு அணைகளில் உள்ள சில ஷட்டர்கள் சேதமடைந்து நீர் வெளியேறி வருகின்றன. அதனை பாதுகாக்க தமிழக அரசு அணை பாதுகாப்பு சட்டத்தை செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 3 முக்கிய கோரிக்கைகளை முன்னிறுத்தி தமிழக பாஜக சார்பில் வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி முதல் ஈரோட்டில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

IPL 2025 KKR vs srh
KKR vs SRH - IPL 2025 1st innings
Opposition leader Rahul Gandhi
CM MK Stalin speech CPIM Conference
TVK Leader Vijay
Watermelon - sathish kumar