SLvIND : முதல் ஒருநாள் போட்டி!! சர்ச்சை முதல் சாதனை வரை ..என்னென்ன தெரியுமா?
SLvIND : கடந்த ஜூலை 27 ம் தேதி இலங்கையில் 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளை கொண்ட சுற்றுப்பயண தொடரானாது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இது வரை முதலில் நடைபெற்ற 3 டி20 போட்டிகளை கொண்ட தொடரில் 3-0 என கைப்பற்றி இருந்தது.
அதன்பிறகு நேற்று இரு அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரானது தொடங்கப்பட்டது. இதில் நேற்று நடைபெற்ற முதல் போட்டியானது டிராவில் முடிவடைந்தது. இதனால் எளிதில் ஜெயிக்க வேண்டிய போட்டியை இந்திய அணி கோட்டை விட்டது என்றே கூறலாம்.
நேற்று முடிவடைந்த இந்த போட்டியில் 2 விஷயங்கள் நடந்தது, அதில் ஒன்று சாதனை மற்றொன்று ரசிகர்களின் சர்ச்சையான கேள்வி. அதில் சாதனை என்னவென்றால் இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா செய்தது தான்.
அதே போல் சர்ச்சையான கேள்வி என்னவென்றால் ஒரு போட்டி ‘டை’ அதாவது ட்ரா ஆன பிறகு எதற்கு சூப்பர் ஓவர் நடத்தவில்லை? என்பது தான். இந்த இரண்டை பற்றியும் தற்போது பார்க்கலாம்.
ரோஹித் சர்மா சாதனை :
நேற்றைய போட்டியில் இலங்கை அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டை இழந்து 230 ரன்கள் எடுத்திருந்தது. நிர்ணயித்த இந்த ஸ்கோரை எடுப்பதற்கு இந்திய அணியின் கேப்டன ரோகித் சர்மாவும், கில்லும் களமிறங்கினார்கள். அதில் ரோஹித் சர்மா 47 பந்துகளில் 58 ரன்கள் அடித்த ஆட்டமிழந்தார்.
வெறும் பத்து ஓவர்களுக்குள் அந்த அரை சதத்தை பூர்த்தி செய்திருந்தார். இந்த பட்டியலில் இந்திய அணி வீரேந்திர சேவாக் 7 முறை 10 ஓவர்களுக்குள் அரைசதம் அடித்து இருக்கிறார். அவருக்கு அடுத்த இடத்தில் ரோஹித் சர்மா 3 முறை இதை செய்து சாதனை படைத்துள்ளார்.
இதை தொடர்ந்து ரோகித் சர்மா அந்த போட்டியில் 3 சிக்ஸர்கள் அடித்தார். இதன் மூலம் அவர் 134 இன்னிங்ஸில் 734 சிக்ஸர்கள் அடித்து இங்கிலாந்து கேப்டனாக இருந்த போது இயான் மோர்கன் சாதனையை முறியடித்துள்ளார். இலங்கையின் முன்னாள் கேப்டனான இயான் மோர்கன் 18 இன்னிங்ஸில் 233 சிக்ஸர்கள் அடித்து இருக்கிறார்.
மேலும், சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு துவக்க வீரராக 15,000 ரன்களை எட்டி உள்ளார். விரைவாக இந்த மையில் கல்லை எட்டிய 2-வது வீரர் என்ற சாதனையும் அவர் தற்போது படைத்துள்ளார். இதற்கு முன் சச்சின் டெண்டுல்கர் 331 இன்னிங்ஸில் 15,000 ரன்கள் கடந்து முதல் இடத்தில் உள்ளார்.
அவருக்கு அடுத்தபடியாக ரோகித் சர்மா இந்த மையில்கல்லை கடந்துள்ளார் பட்டியலில் 3-வது இடத்தில் ஆஸ்திரேலிய முன்னாள் வீரரான டேவிட் வார்னர் 361 இன்சில் இந்த சாதனையை படித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சர்ச்சையான கேள்வி :
நேற்றைய நடைபெற்ற இந்த போட்டியானது டிராவில் முடிந்தவுடன், போட்டியை முடித்து விட்டனர். ஆனால் சூப்பர் ஓவர் நடைபெறவில்லை. இதை ரசிகர்கள் எதற்காக சூப்பர் ஓவர் நடத்தவில்லை என்ற கேள்வியை எழுப்பி வந்தனர். இதற்கு காரணம் ஐசிசியின் விதி தான்.
நடைபெறும் 50 ஓவர் போட்டிகளில் எந்த ஒரு சாதாரண லீக் போட்டிகள் டிராவில் முடிந்தாலும் அதற்கு சூப்பர் ஓவர் நடத்தலாம் என்ற எதை ஒரு விதியும் இல்லை. ஒரு வேளை அது நாக் அவுட் போட்டியாக இருந்தால் மட்டுமே சூப்பர் ஓவர் நடத்த வேண்டும் என ஐசிசியின் விதி கூறுகிறது.
அதே எந்த ஒரு டி20 போட்டியானது டிராவில் முடிந்தாலும் அது லீக் சுற்று இல்லை இது போன்ற தொடர் போட்டியோ ஆனால் கூட அதற்கு கட்டாயமாக சூப்பர் ஓவர் நடத்து வேண்டும் என்பதே ஐசிசியின் விதியாகும்.
அதே போல் ஒவ்வொரு தொடருக்கும் சூப்பர் ஓவர் தொடர்பான விதிகளை அந்த தொடரை நடத்தும் நாடுகளோ அல்லது அந்த அமைப்புகளோ முடிவு செய்து கொள்ளலாம்.
ஆனால் அப்படி எந்த ஒரு முடிவும் இந்த இலங்கை – இந்தியா அணிகளுக்கு இடையேயான தொடரில் முடிவாகவில்லை அதனால் தான் நேற்றைய போட்டி டிரா ஆன போது சூப்பர் ஓவர் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.