விஜய் ஆண்டனி ரசிகர்களுக்கு ஷாக்.. பகிரங்கமாக வீடியோ வெளியிட்ட இயக்குனர்.!

மழை பிடிக்காத மனிதன் : விஜய் ஆண்டனி நடிப்பில், S.D.விஜய் மில்டன் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் மழை பிடிக்காத மனிதன். இந்த படத்தில் சரத்குமார், சத்யராஜ், மேகா ஆகாஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் முக்கிய வேடத்தில் மறைந்த நடிகரும் அரசியல் தலைவருமான விஜயகாந்த் நடிக்க இருந்து பின்னர் நடிக்கவில்லை என்று கூறப்பட்டது.
படத்தின் டீசர், ட்ரைலர் ஆகியவை நல்ல வரவேற்ப்பை பெற்றதை தொடர்ந்து இன்று இப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது. படத்தின் ட்ரைலரில் இந்த படம் ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் வகையை சேர்ந்தது போல காட்சிப்படுத்தப்பட்டது.
இன்று ரிலீஸாகியுள்ள சமயத்தில், தற்போது இயக்குனர் விஜய் மில்டன் ஓர் அதிர்ச்சி வீடீயோவை வெளியிட்டு விஜய் ஆண்டனி ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளார். அந்த வீடியோவில், படத்தின் முதல் காட்சியை தற்போது தான் பார்த்து முடித்தேன். அதில் முதல் ஒரு நிமிடம் ஒரு காட்சி வருகிறது. அது நான் இயக்கவே இல்லை.
அந்த கட்சியை யார் வைத்தார்கள் என்றும் தெரியவில்லை. படத்தின் சாராம்சமே, ஹீரோ விஜய் ஆண்டனி யார் என கேள்வியை ரசிகர்கள் மனதில் எழுப்பி இறுதியில் அந்த சஸ்பென்ஸை அவிழ்ப்பது. ஆனால் முதல் ஒரு நிமிட காட்சியில் ஒரு காட்சி வைத்து அதில் விஜய் ஆண்டனி கதாபாத்திரத்தை பற்றி கூறிவிட்டனர். இப்படி செய்தால் இந்த படத்தை ஒரு ரசிகர் எப்படி சஸ்பென்ஸோடு பார்ப்பார்கள்.?
சென்சார் முடிந்த பிறகு இப்படி ஒரு காட்சியை இயக்கி வைக்கும் உரிமையை யார் கொடுத்தது.? நான் யாரையும் குற்றம் சாட்டவில்லை. ரசிகர்கள் முதல் ஒரு நிமிட காட்சியை மறந்து விட்டு படத்தை பாருங்கள் என அதிர்ச்சி வீடீயோவை வெளியிட்டுள்ளார். உண்மையாகவே படத்தில் இப்படி காட்சி இயக்குனரை மீறி சேர்க்கப்பட்டதா.? அல்லது இது ஒருவிதமான விளம்பர யுக்தியா என்று ரசிகர்கள் குழம்பி போயுள்ளனர்.
Vijay Milton????
— Christopher Kanagaraj (@Chrissuccess) August 2, 2024
லேட்டஸ்ட் செய்திகள்
வணிக பயன்பாட்டுக்கான LPG சிலிண்டர் விலை உயர்வு.!
March 1, 2025
நடிகை வழக்கில் தொண்டர்கள் திரள் நடுவில் காவல் நிலையத்தில் சீமான் ஆஜர்!
February 28, 2025
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025