மகாராஜா படம் பார்த்து மனதார பாராட்டிய ரஜினிகாந்த்.! எமோஷனலாக நன்றி தெரிவித்த இயக்குனர்!

Nithilan Saminathan and Rajinikanth

மகாராஜா : பொதுவாகவே ஒரு நல்ல திரைப்படம் வெளியானது என்றால் அந்த படங்களை பார்த்துவிட்டு ரஜினிகாந்த் இயக்குனர் மற்றும் படக்குழுவை பாராட்டுவார். அப்படி தான் தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் ஆன ‘மகாராஜா’ படத்தினை பார்த்துவிட்டு இயக்குனரை நேரில் அழைத்து ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.

விஜய் சேதுபதியின் 50-வது திரைப்படமாக எடுக்கப்பட்ட இந்த மகாராஜா திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தது. இதனையடுத்து, படத்தினை பார்த்து ரஜினிகாந்த்துக்கு மிகவும் பிடித்து போக இயக்குனர் நித்திலன் சுவாமிநாதனை தன்னுடைய வீட்டிற்கு நேரில் அழைத்துள்ளார்.

அழைத்து படம் மிகவும் நன்றாக இருக்கிறது என படம் பற்றி பேசிவிட்டு அவருக்கு தன்னுடைய வாழ்த்துக்களை ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இருவரும் சந்தித்தபோது   எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

பாராட்டியதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் ” அன்புள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார், வசீகர சந்திப்புக்கு நன்றி. கோலிவுட்டின் தங்கக் கரங்களில் இருந்து வாழ்க்கை, அனுபவம், வாழ்க்கை முறை பற்றிய புரிதல் பற்றிய நாவலைப் படிப்பது போல் இருந்தது.. உங்கள் விருந்தோம்பல் மற்றும் பணிவு என்னை வியக்க வைத்தது. மகாராஜாவை நீங்கள் எந்தளவுக்கு நேசித்தீர்கள் என்பதை அறிந்து மகிழ்ந்தேன். மீண்டும் ஒரு நன்றி மற்றும் தலைவர் வாழ்க” என கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live tamil news
empuraan - gokulam
Anand - WaqfAmendmentBill
Darshan Attacks
Tamil Nadu Police Recruitment
gold price
tvk police