கோட் டிரைலர் எப்போது ரிலீஸ்! சூடான லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
கோட் : விஜய் நடித்துள்ள கோட் படம் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் மீனாட்சி சவுத்ரி, மாளவிகா சர்மா, பிரசாந்த் தியாகராஜன், பிரபு தேவா, அஜ்மல் அமீர், பிரேம் ஜி, மோகன், யோகி பாபு, சினேகா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் எல்லாம் மும்மரமாக நடைபெற்று வருகிறது.
கோட் படம் எப்படி இருக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், படத்தின் டிரைலர் எப்போது வெளியாகும் என்பது பற்றி இயக்குனர் வெங்கட் பிரபு பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” கோட் படம் நன்றாக வந்து கொண்டு இருக்கிறது. படத்தின் டிரைலர் படம் வெளியாவதற்கு இரண்டு நாட்கள் முன்பு வெளியிடபடலாம்.
இப்போதெல்லாம் ஒரு படம் வெளியாகும் இரண்டு மற்றும் 1 வாரங்களுக்கு முன்பு தான் படத்தின் டிரைலர் வெளியிடப்படுகிறது. எனவே, கோட் படத்தின் டிரைலரும் படம் வெளியாகும் 10 நாட்களுக்கு முன்பு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடந்த நாங்கள் தயாராக இருக்கிறோம். தளபதி எப்போம் சொல்கிறாரோ அப்போது நடத்தி கொள்ளலாம்” எனவும் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.