ரூ. 40,000 சம்பளத்தில் அரசாங்கத்தில் மேலாளர் பணி! அனுபவம் உள்ள இன்ஜினீர்களே உடனே விண்ணப்பிங்க !
சென்னை : தமிழக அரசின் முதலீட்டு ஊக்குவிப்பு நிறுவனமான வழிகாட்டுதல் தமிழ்நாடு சென்னையில் பல்வேறு மேலாளர், மூத்த அசோசியேட், உள்ளிட்ட பதவிகளை நியமிக்க முடிவு செய்து தற்போது அதற்கான வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆன்லைன் விண்ணப்பம் 30-07-2024 முதல் தொடங்கிய நிலையில், வரும் ஆகஸ்ட் 4-ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்ய கடைசி தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசில் வேலைக்கு சேர விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே வரும் விவரங்களை சரியாக படித்துக்கொண்டு இந்த பணிக்கு விண்ணப்பம் செய்து கொள்ளுங்கள்.
காலியிடங்கள் விவரம்
பதவியின் பெயர் | எண்ணிக்கை |
துணைத் தலைவர் & மேலாளர் | பல்வேறு |
மூத்த அசோசியேட் (Investment) | பல்வேறு |
மூத்த அசோசியேட் (Policy) | பல்வேறு |
வயது வரம்பு
- மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணியில் வேலைக்கு சேர வயது வரம்பு குறிப்பிடப்படக்கூடாது என்பதால் நீங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு சென்று பார்த்து அதன் மூலம் தெரிந்துகொள்ளுங்கள்.
தேவையான கல்வித்தகுதி
- மேலாளர் மற்றும் துணைத்தலைவர் பதவிக்கு விண்ணப்பம் செய்யும் விண்ணப்பதாரர்கள் பொறியியல், மேலாண்மை அல்லது நிதித்துறையில் பிஎச்டி, முதுகலை அல்லது இளங்கலை பட்டத்துடன் இணைந்து 10 முதல் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- மூத்த அசோசியேட் (Investment) பதவிக்கு விண்ணப்பம் செய்யும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பதாரர்கள் பொறியியல், மேலாண்மை அல்லது நிதித்துறையில் PhD, முதுகலை, இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும், UPSC தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது ஆட்சி அல்லது மேம்பாட்டில் மூன்று முதல் எட்டு ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- மூத்த அசோசியேட் (Policy) பணிக்கு விண்ணப்பம் செய்யும் விண்ணப்பதாரர்கள் UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று, பொருளாதாரம், நிதி, புள்ளியியல் அல்லது பொதுக் கொள்கை ஆகியவற்றில் PhD, முதுகலை அல்லது இளங்கலை பட்டம் பெற்ற மூன்று முதல் 8 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்களாக இருக்கவேண்டும்.
சம்பளம் எவ்வளவு?
- மேற்கண்ட பணிகளில் வேலைக்கு சேர விரும்பி விண்ணப்பிக்கும் விண்ணப்ப தாரர்களில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ரூ. 40,000 சம்பளம் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
விண்ணப்பம் செய்வது எப்படி?
- இந்த பணியில் வேலைக்கு சேர உங்களுக்கு ஆர்வமும் தகுதியும் இருந்தது என்றால் நீங்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு https://investtn.zohorecruit.in/jobs/Careers செல்லவேண்டும்.
- பின் அதில் இந்த வேலை சம்பந்தமாக கொடுக்கப்பட்டுள்ள விளம்பரத்தை க்ளிக் செய்யவேண்டும்.
- செய்த பிறகு அதில் உங்களுடைய விவரங்கள் அனைத்தும் கேட்கப்படும்.
- உங்களுடைய தேவையான ஆவணங்களை வைத்து இந்த வேலை தொடர்பான விண்ணப்பத்தை நிரப்புங்கள்.
- பின் சமர்ப்பி என்பது வந்தவுடன் விண்ணப்பக்கட்டணம் கேட்கும். அதனை செலுத்தினால் நீங்கள் இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்து முடித்துவிட்டீர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை
- விண்ணப்பம் செய்து முடித்த பிறகு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் நேரில் அழைக்கப்பட்டு தேர்வு செயல்முறை எழுத்துத் தேர்வு/நேர்காணல் மூலம் வேலைக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
முக்கிய நாட்கள்
விண்ணப்பம் தொடங்கிய தேதி | 30-07-2024 |
விண்ணப்பம் செய்ய கடைசி தேதி | 04-08-2024 |
முக்கிய விவரம்
அதிகாரப்பூர்வ இணையத்தளம் | க்ளிக் |
விண்ணப்ப படிவம் | க்ளிக் |
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | க்ளிக் |