விளையாட வரலையா உடனே தடை பண்ணுங்க! கண்டிஷன் போட்ட காவ்யா மாறன்!
ஐபிஎல் 2025 : கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் அடுத்ததாக காத்திருக்கும் ஒரு தொடர் என்றால் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியை கூறலாம். இதனையடுத்து, ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களும் 2025 சீசனுக்கு முன்னதாக இந்த ஆண்டின் இறுதியில் நடைபெற உள்ள மெகா ஏலத்திற்கு தயாராகி வருகின்றனர். அதற்கு முன்னதாக நேற்று (ஜூலை 31) இதற்கான கூட்டம் நடைபெற்றது.
அந்த கூட்டத்தில் கவனிக்கப்பட்ட விஷயங்களில் ஒன்று என்னவென்றால், வீரர்கள் ஒரு அணிக்கு தேர்வு செய்யப்பட்ட பிறகு லீக்கிற்கு வரவில்லை என்றால் அவர்கள் விளையாட தடை செய்ய வேண்டும் என்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் உரிமையாளர், காவ்யா மாறன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியதாவது. ” ஏலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, காயத்தை தவிர எந்தவொரு காரணத்திற்காகவும் ஒரு வீரர் சீசன் முழுவதும் விளையாட வரவில்லை என்றால், அவர் ஐபிஎல் தொடரிலிருந்து செய்யப்பட வேண்டும். உரிமையாளர்கள் தங்கள் அணிக்கான சரியான அணியை உருவாக்க ஏலத்தில் மிகுந்த முயற்சி மேற்கொள்கிறார்கள்.
பொதுவாகவே, ஒரு வீரர் ஐபிஎல் ஏலத்தில் குறைந்த தொகைக்கு எடுக்கப்பட்டுவிட்டால் பின்னர் அவர் சில காரணங்களுக்காக விளையாட வரவில்லை என்றால், இது அணியின் திட்டத்தையும் சமநிலையையும் பெரிதும் பாதிக்கும். வெளிநாட்டு வீரர்கள் ஒரு சில காரணத்திற்காக தொடரின் கடைசி நேரத்தில் விட்டு விளங்குகின்றனர். அப்படி பட்ட வீரர்களை அந்த தொடரில் தடை செய்து அவர்களுக்கு ஏலத்தின் மூலம் கிடைக்கும் பணத்தை என்ன செய்வதென்று அந்தந்த அணியின் உரிமையாளர்களுக்கு கொடுக்கவேண்டும்.
இது ஏதேனும் முரண்பாடு ஏற்பட்டால் தீர்வு காண உதவும். சில வீரர்கள் தங்களை ஒரே அளவிலான திறமையுடையவர்களாக கருதுகிறார்கள், ஆனால் ஒருவருக்கு அதிக தொகை வழங்கப்படும் போது, மற்றொருவர் குறைவான தொகையை பெறுகிறார்கள் என்ற எண்ணம் இங்கே உருவாகிறது. அதனால், இது போன்ற விதிகள் வருவதால் ஒரு வேரறுக்கனா ஒப்பந்தத்திற்கு அப்பாற்பட்ட கட்டணத்தின் சாத்தியத்தையும் நீக்கும்”, எனவும் காவ்யா மாறன் தெரிவித்துள்ளார்.