போடு…போடு… கருணாநிதியின் பெயரில் சாலை…! முதல்வர் அதிரடி அறிவிப்பு…

Default Image

கருணாநிதியின் பெயரை புதுவையில் 100 ஆதி சாலை மற்றும் பைபாஸ் சாலைக்கு சூட்ட அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

புதுவை மாநில முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இது குறித்து முதலமைச்சர் நாராயணசாமி பேசும்போது புதுச்சேரியில் இந்திரா காந்தி சதுக்கம் முதல் ராஜீவ் காந்தி சதுக்கம் வரையிலான 100 அடி சாலைக்கு மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பெயரை சூட்ட அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருந்தது.

இது தவிர காரைக்கால் பிராந்தியத்தில் இருக்கும் திருநள்ளார் பைபாஸ் சாலை மற்றும் பட்டமேற்படிப்பு மையம் ஆகியவற்றுக்கும் கருணாநிதி பெயர் சூட்ட முடிவு செய்யப்பட்டது.கருணாநிதி பெயரில் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் இருக்கை அமைக்கப்படும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்