வயநாடு பெருந்துயரம்.. ராகுல், பிரியங்கா காந்தி நேரில் ஆய்வு.!
கேரளா : நிலச்சரிவால் அதிகம் பாதிக்கப்பட்ட கேரள மாநிலம் சூரல்மலையில் ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். காந்த ஜூலை 30 அதிகாலையில் வயநாட்டில் உள்ள முண்டக்காய் மற்றும் சூரல்மலையில் பாரிய நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இந்த நிலச்சரிவுகளில் சிக்கி 280க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் மற்றும் 200 பேர் காயமடைந்தனர்.
இன்னும், 240 பேரை காணவில்லை என்று சொல்லப்படுகிறது. தொடர்ந்து, 3வது நாளாக மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இதுவரை1,000க்கும் மேற்பட்டவர்களைக் காப்பாற்றியுள்ளனர். நிலச்சரிவால் பாதிக்கப்பட்டு வயநாட்டில் உள்ள மேப்பாடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை சந்தித்து ராகுல் காந்தி ஆறுதல் கூறினார்.
மேலும், அங்கு பாதிக்கப்பட்ட மக்களின் தேவை, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ராகுல் காந்தி கேட்டறிந்தார். இதனையடுத்து, மேப்பாடியில் இருக்கும் நிவாரண முகாம்களுக்கு சென்று மக்களை சந்திக்கவும் ராகுல் காந்தி திட்டமிட்டுள்ளார். தற்போது அங்கு மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளதால், முண்டக்கையில் மீட்புப்பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை காண நேற்றையே தினமே, வயநாட்டில் வரவிருந்தனர். ஆனால், அங்கு இடைவிடாத மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக, அவர்களது பயணம் திடீரென ரத்து செய்யப்பட்ட நிலையில், இன்று வருகை தந்துள்ளார்கள்.