உயிரிழந்தோர் உடல்கள்., இழந்த சான்றிதழ்கள்., நிவாரண பொருட்கள்.! பினராயி விஜயன் கோரிக்கை.! 

Wayanad Landslide - Kerala CM Pinarayi Vijayan (2)

வயநாடு : வயநாடு நிலச்சரிவு மீட்பு பணி நிலவரங்கள் குறித்து கேரளா முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்களிடம் பல்வேறு தகவல்களை குறிப்பிட்டார். முன்னதாக, ஹெலிகாப்டர் மூலம் வயநாடு நிலச்சரிவு பாதிப்புகளை நேரில் பார்வையிட்டார். அடுத்ததாக, வயநாட்டில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்று நிலச்சரிவு பற்றி ஆலோசனை நடத்தினார்.

அனைத்துக்கட்சி கூட்டம் நிறைவடைந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பினராயி விஜயன், வயாநாடு நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நிலச்சரிவில் சிக்கி பலரும் மாயமாகி இருப்பது தெரிகிறது. நிலச்சரிவில் இன்னும் நிறைய பேர் சிக்கி உள்ளனர்.

குறிப்பிட்ட இடங்களுக்கு மண் அள்ளும் இயந்திரம் செல்ல முடியவில்லை. இதனால் மீட்பு பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மலப்புரம் பகுதியில் ஆற்றங்கரை பகுதியில் உடல்கள் அடித்து செல்லப்பட்டுள்ளன. அங்கு உடல்களை தேடும் பனி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நிலச்சரிவில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டவர்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்கள் நிரந்தரமாக தங்குவதற்கு இடம் ஏற்பாடு செய்யப்படும். நிலச்சரிவால் உறவுகளை இழந்து மனதளவில் பாதிக்கப்பட்டள்ளவர்களுக்கு முறையாக கவுன்சலிங் அளிக்கப்படும். முகாம்களில் தங்கி இருப்போரை பார்க்க வருபவர்கள் முகாம்களுக்கு வெளியே இருந்து சந்திக்க ஏற்பாடு செய்யப்படும்.

நிவாரண பொருட்களை யாரும் பாதிக்கப்பட்ட இடத்திற்கு நேரடியாக சென்று தர வேண்டாம். அதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். சிறுவர்களுக்கு கல்வி அவசியம். இப்போதைக்கு பள்ளி செயல்பட முடியாது. அதனால் முகாம்களில் கல்வி கற்க ஏற்பாடு செய்யப்படும்.

பேரிடரை தொடர்ந்து தொற்று நோய்கள் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போதைய சூழல் சரியில்லை. அதனால், யாரும் வயநாட்டிற்கு நேரில் வந்து உதவ வரவேண்டாம். முகாம்களில் உள்ளவர்களை அறிய உதவி எண்கள் அளிக்கப்பட்டுள்ளன. இறந்தோரின் உடல்களை பெறுவதற்கு ஓரிரு நபர்கள் வந்தால் போதும். நிலச்சரிவில் பலரும் இழந்த அனைத்து சான்றிதழ்களையும் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்