கேரள நிலச்சரிவு: தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் உயிரிழந்த சோகம்.. அவசர எண் அறிவிப்பு.!

landslide - Wayanad

வயநாடு : கேரளா மாநிலத்தில் பெய்துவரும் கனமழையால், வயநாடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதையுண்டு இதுவரை குழந்தைகள் உட்பட 84 பேரின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த நிலச்சரிவில் சிக்கிய 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 400க்கும் மேற்பட்டோரின் நிலை என்ன ஆனதென்று தெரியவில்லை. அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம்  கூடலூர் அருகே உள்ள புளியம்பாறை பகுதியைச் சேர்ந்த காளிதாஸ், கட்டட வேலைக்கு கேரளா சென்றிருந்த நிலையில், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த சமபவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், வயநாடு பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ள தமிழர்களுக்கு உதவும் வகையில், தமிழக அரசு சார்பில் இலவச தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. உதவி தேவைப்படுவோர், 1070 என்ற எண்ணில் மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்டு தகவல்களை தெரிவிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

இதுவரை எந்த அழைப்புகளும் வரவில்லை என மாநில அவசர கட்டுப்பாட்டு மைய அதிகாரிகள் தகவல் தெரிவிப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்