குட்கா ஊழல்…!அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சிபிஐ ரெய்டு …!குற்றத்தை நிரூபிக்க வேண்டும்…!முதலமைச்சர் பழனிசாமி அதிரடி
முதலமைச்சர் பழனிசாமி அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான குற்றச்சாட்டுக்கு பதில் கூறியுள்ளார்.
குட்கா ஊழல் தொடர்பாக தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி 35 இடங்களில் சிபிஐ சோதனை நடைபெற்றது. அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி ராஜேந்திரன் மற்றும் முன்னாள் சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா ஆகியோரின் வீடுகளில் இந்தச் சோதனை நடந்தது.இது தமிழகளவில் ஒரு அதிர்வலையை உண்டாக்கியது.சோதனைக்கு பின்பு இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் 5 பேரும் வருகிற 20-ந்தேதி வரையில் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் முதலமைச்சர் பழனிசாமி அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான குற்றச்சாட்டுக்கு பதில் கூறியுள்ளார்.அவர் கூறுகையில்,குற்றச்சாட்டு கூறுவதால் ஒருவர் குற்றவாளியாகிவிட முடியாது. குற்றத்தை நிரூபிக்க வேண்டும்.மேலும் எந்த துறையிலும் தவறு நடந்ததாக புகார் வரவில்லை என்றும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.