3-வது டி20I : இந்திய அணியில் யாருக்கு இடம் .. சாஞ்சுவா? அல்லது பண்டா?

SLvIND , 3rd T20I

SLvsIND : இந்திய அணி இலங்கையில் 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் தொடர் என சுற்று பயணத்தொடரில் விளையாடி வருகின்றனர். இதில், ஏற்கனவே 2 டி20 போட்டிகள் நடைபெற்று இருந்தது, அந்த 2 போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றி இருந்தது.

மேலும், இன்று இரவு 7 மணிக்கு இலங்கையின் பல்லேகலேவில் உள்ள மைதானத்தில் இந்த தொடரின் 3-வது மட்டும் கடைசி டி20 போட்டியானது நடைபெற உள்ளது. எப்படியும் இந்திய அணி இந்த போட்டியையும் வென்று தொடரை 3-0 என ‘வைட்வாஷ்’ செய்வதர்காகவே முனைப்புடன் விளையாடுவார்கள்.

மேலும், இன்று நடைபெற இருக்கும் 3-வது டி20 போட்டியில் இன்று எந்த வீரர்கள் இந்திய அணியில் விளையாடுவார்கள் என எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. அதன்படி நடைபெற்ற 2-வது டி20 போட்டியில் துணை கேப்டனான கில் கழுத்து வலியின் காரணமாக இடம்பெறவில்லை.

அவருக்கு மாறாக சஞ்சு சாம்சன் அணியில் இடம் பெற்றிருந்தார், ஏற்கனவே அணியில் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பராக இருக்கும் நிலையில், சஞ்சு சாம்சன் இடம் பெற்றது ரசிகர்களுக்கு சற்று மன நிறைவு ஏற்பட்டது. ஆனால் அந்த போட்டியில் அவருக்கு கிடைத்த அந்த வாய்ப்பையும் சஞ்சு தவறவிட்டார் என்றே கூறலாம்.

அவர், 2வது டி20 போட்டியில் ஒப்பனராக களமிங்கிய சஞ்சு சாம்சன் முதல் பந்திலேயே போல்டாகி வெளியேறினார். இதன் காரணமாக அவர் இன்றைய போட்டியில் விளையாடுவாரா என்பது கேள்வி குறியாக இருந்து வருகிறது.  மேலும், பந்து வீச்சு துறையை பார்க்கையில் இந்திய அணி பெரிதாக சறுக்கலை சந்திக்கவில்லை.

இதன் காரணமாக தொடரை கைப்பற்றியதால் ஹர்ஷித் ராணா, சிவம் துபே மற்றும் கலீல் அகமது வீரர்களுக்கு இந்த போட்டியில் வாய்ப்புகள் விளையாடுவதற்கு வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. அதே போல இலங்கை அணியில் பிரெச்சனையாக இருப்பது பேட்டிங்கின் மிடில் ஆர்டர் தான். இந்த போட்டியில் அவர்கள் அதனை சரி செய்து விளையாடுவார்களா என்பதை போட்டியின் போதே தெரியும்.

இந்திய அணியை பார்க்கையில், பயிற்சியாளராக இருக்கும் கவுதம் கம்பீர் மறுவாய்ப்பாக சஞ்சு சாம்சனை அணியில் இடம்பெற செய்வாரா? ஒரு வேளை கில் அணியில் இடம் பெற்றால், விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் அல்லது சஞ்சு சாம்சன் இருவரில் யார் அணியில் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடேயே இருந்து வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்