சமந்தாவை அடுத்து சர்ச்சையில் சிக்கிய நயன்தாரா.. விளாசிய மருத்துவர்! காரணம் என்ன?

samantha - nayanthara

நயன்தாரா : நடிகை சமந்தா, மயோசைட்டிஸ் என்கிற அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்ட பின், அதற்கான சிகிச்சை மேற்கொண்டு வருவதோடு, கடந்த சில மாதங்களாக உடல்நலம் தொடர்பான செய்திகளை போட்காஸ்ட் மூலமாக பல விஷயங்களை கூறி வருகிறார் .

ஆனால், சமீபத்தில் ஹைட்ரஜன் பெராக்சைடு நெபுலைசரைப் பயன்படுத்துவதன் நன்மைகள் குறித்து அவர் பதிவிட்ட கருத்தை மருத்துவர் அப்பி பிலிப்ஸ் என்பவர் கடுமையாக விமர்சனம் செய்தார். அதே மருத்துவர் தற்போது நடிகை நயன்தாராவை விமர்சித்து பதிவிட்டிருப்பது விவாதப் பொருளாகியுள்ளது.

நடிகை நயன்தாரா செம்பருத்தி தேநீர் குடிப்பதன் நன்மைகள் குறித்த பதிவைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அந்த பதிவில், “செம்பருத்தி மலர் தேநீர். இது எனக்கு மிகவும் பிடித்தமானது மற்றும் மிகவும் உற்சாகமானது. இது நீண்ட காலமாக ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்படுகிறது. இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது நீரிழிவு, அதிக கொழுப்பு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்களுக்கு உதவுகிறது.

இது மிகவும் குளிர்ச்சியாக இருப்பதால், முகப்பரு, தோலில் ஏற்படும் சூடான கொதிப்பு போன்றவற்றுக்கு இது நன்மை பயக்கும். செம்பருத்தி டீயில் வைட்டமின்கள் நிறைந்துள்ளது மற்றும் மழைக்காலங்களில் நமது நோய் எதிர்ப்பு சக்தியை சீராக வைக்கிறது. இது பருவகால தொற்று மற்றும் நோய்களிலிருந்து பாதுகாக்கும் பாக்டீரியா எதிர்ப்பு விளைவுகளைக் கொண்டுள்ளது. எனவே இந்த டீயை குடித்து ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருங்கள்” என குறிப்பிட்டு இருந்தார்.

இது குறித்து, கல்லீரல் நிபுணர் சிரியாக் அப்பி பிலிப்ஸ் என்பவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், சமந்தா தனது பின்தொடர்பவர்களை தவறாக வழிநடத்துவதை விட இந்தப் பதிவின் மூலம் நடிகை நயன்தாரா இரண்டு மடங்கு தவறாக வழிநடத்துகிறார். அவரைப் பின்தொடரும் 8.7 மில்லியன் மக்கள் செம்பருத்தி மலர் தேநீர் பற்றி தவறான தகவலைத் தருகின்றனர். டீ நல்லா ருசியாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

“செம்பருத்தி பூவில் ஆரோக்கிய நன்மைகள் இருப்பதாக அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை எனவும், இதை தினமும் குடித்தால் பெண்கள் பூப்பெய்துவது தள்ளிப்போகும்” எனவும் கூறியிருந்தார். இது தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியது. இதையடுத்து நயன்தாரா தனது பதிவை டெலிட் செய்துவிட்டார்.

இதனையடுத்து, நயன்தாரா டாக்டரின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில், தனது இன்ஸ்டா ஸ்டோரில், தொடர் பதிவுகளை பகிர்ந்துள்ளார். “பலவீனமானவர்களிடம் வாக்குவாதம் செய்யாதே. அதன் மூலம் அவர்கள் உங்களைத் தங்கள் நிலைக்குக் கீழே கொண்டு வந்து அடிப்பார்கள்” என்று ஒரு மேற்கோளைப் பகிர்ந்துள்ளார் விவரம் வேண்டுவோர் இந்தப் பதிவுகளைப் பார்க்கலாம் என்று கூறி இரண்டு புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்